திரையரங்கில் படத்தின் நடுவே இடைவேளை வருவதற்கான உண்மை காரணம்.., என்ன தெரியுமா?
நம் வாழ்க்கையில் அனைவரும் எப்போதாவது திரையரங்கில் படம் பார்க்கச் சென்றிருக்க வேண்டும்.
அப்போது படத்தின் நடுவே வரும் இடைவேளையில் மக்கள் பாப்கார்ன் மற்றும் உணவுப் பொருட்களை வாங்கச் செல்கிறார்கள்.
ஆனால் இந்த இடைவேளை பாப்கார்ன் சாப்பிடுவதற்கு மட்டும் அல்ல. இதற்குப் பின்னால் உள்ள உண்மையான காரணம் வேறு ஒன்று இருக்கிறது.
திரையரங்குகளில் வெளியாகும் படங்களில் பார்வையாளர்கள் சிறிது நேரம் ஓய்வெடுக்க இடைவெளி கொடுக்கப்படுகிறது.
அந்தக் காலத்தில் படங்களில் பெரிய ரீல்கள் இருந்ததால், இடைவேளையின்போது முதல் ரீல் அகற்றப்பட்டு இரண்டாவது ரீல் மாற்றப்படும்.
இதற்காகவே தியேட்டர்களில் இடைவேளை வைக்கப்பட்டது. ரீல்களை மாற்றுவதற்கான நேரம்தான் தியேட்டரில் இடைவேளையாக விடப்படுகிறது.
இதுதான் படத்தின் நடுவே இடைவேளை வருவதற்கான தொழில்நுட்பக் காரணம்.
இப்போது ரீல்களை மாற்றும் அவசியம் இல்லை என்றாலும் தியேட்டர்களில் இடைவேளை விடுவது தொடர்கிறது.
அதற்கு முக்கியக் காரணம் இடைவேளை நேரத்தில் அங்கு கிடைக்கும் பாப்கான், தின்பண்டங்கள், கூல்டிரிங்க் போன்றவற்றை ரசிகர்கள் வாங்கி சுவைக்கிறார்கள்.
இது திரையரங்கிற்கு ஒரு பெரியளவு வருமான வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |