அந்தர் பல்ட்டி அடித்த ட்ரம்ப்... திடீரென உக்ரைனுக்கு ஆதரவு: என்ன காரணம்?
ரஷ்ய உக்ரைன் போர் தொடர்பில் உக்ரைனை அலட்சியம் செய்து வந்த ட்ரம்ப், திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார்.
அந்தர் பல்ட்டி அடித்த ட்ரம்ப்
ரஷ்யா உக்ரைனை ஊடுருவிய நிலையிலும் ரஷ்யாவுடன் தொடர்ந்து நட்பு பாராட்டிவந்த ட்ரம்ப், திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார்.
ஆம், ரஷ்யா விமானங்கள் நேட்டோ எல்லைக்குள் அத்துமீறினால், ரஷ்ய விமானங்களை நேட்டோ நாடுகள் சுட்டுத் தள்ளலாம் என்று கூறியுள்ளார் ட்ரம்ப்.
அத்துடன், ரஷ்யா உக்ரைனிடமிருந்து கைப்பற்றிய தனது நாட்டின் பகுதிகள் அனைத்தையும் மீண்டும் மீட்டுக்கொள்ளும் நிலையில் உக்ரைன் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் ட்ரம்ப்.
பொறுமை, நேரம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி ஆதரவுடன், குறிப்பாக நேட்டோவின் ஆதரவுடன், உக்ரைனால் தனது நாட்டின் பகுதிகள் அனைத்தையும் மீண்டும் கைப்பற்றிக்கொள்வது உக்ரைனுக்கு சாத்தியமே என்றும் கூறியுள்ளார் ட்ரம்ப்.
புடினும் ரஷ்யாவும் மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் இருக்கிறார்கள், ஆக, இது உக்ரைன் நடவடிக்கையில் இறங்குவதற்கான நேரம் என்றும் கூறியுள்ளார் ட்ரம்ப்.
திடீரென ட்ரம்ப் மனம் மாற என்ன காரணம்?
நடப்பதைப் பார்க்கும்போது, ட்ரம்ப் இப்படி திடீரென மனம் மாற என்ன காரணம் என்னும் கேள்வி எழுந்துள்ளதை மறுப்பதற்கில்லை.
அதாவது, ராணுவ மற்றும் பொருளாதார நிலையின் நிதர்சனம் ட்ரம்பின் நிலைப்பாடு மாற முதல் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
ஏற்கனவே ரஷ்யா போரில் அதிகம் இழந்துவிட்டது. ரஷ்யா மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் இருப்பதாக ட்ரம்பே கூறியுள்ளார்.
இரண்டாவதாக, உக்ரைனின் கூட்டாளர்கள் உறுதிபட உக்ரைனுடன் நிற்கும்பட்சத்தில், உக்ரைனால் போரில் வெற்றி பெற இயலாது என்றிருந்த நிலை தற்போது மாறியுள்ளதை உணரலாம்.
மேலும், உக்ரைனின் கூட்டாளர்களான ஐரோப்பிய நாடுகளில் தலைவர்கள் ட்ரம்புக்கு கொடுக்கும் அழுத்தமும் காரணமாக இருக்கலாம். ஐரோப்பிய நாடுகளில் தலைவர்கள் பலர் அமெரிக்கா சென்று புடினுடன் ட்ரம்ப் பழகும் விதம் குறித்து எச்சரித்துள்ளார்கள்.
மூன்றாவதாக, அமெரிக்காவில் நிலவும் உள்நாட்டு அரசியலும் ட்ரம்பின் மன மாற்றத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
அதாவது, ட்ரம்ப் ரஷ்யாவை மென்மையாகவே அணுகிவரும் நிலையில், அவர் ரஷ்யா விடயத்தில் கடுமை காட்டுவாரானால், அது அவரது சொந்தக் கட்சியினரின் ஆதரவு ட்ரம்புக்கு பெருக அது உதவியாக இருக்கும்.
கடைசியாக, உக்ரைனும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தைகள் மூலம் சமரசம் காணவேண்டும் என ட்ரம்ப் என்ணியிருக்க, அதில் ரஷ்யா ஆர்வம் காட்டாததால் அவரது நிலைப்பாடு மாறியிருக்கக்கூடும்.
மொத்தத்தில், ரஷ்ய விமானங்களை நேட்டோ நாடுகள் தாக்கலாம், உக்ரைன் தான் இழந்த பகுதிகளை மீட்டுக்கொள்ளலாம் என அறிவித்துள்ள ட்ரம்ப், உலகின் பார்வையில் கம்பீரமாக, உறுதியானவராக நிற்கும் ஒரு தோற்றம் மீண்டும் உருவாகியுள்ளதை மறுப்பதற்கில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |