ஜேர்மனி மற்றும் ஜேர்மன் மொழி மீது அதிக ஆர்வம் காட்டும் நாடொன்று: பின்னணி
துருக்கி நாட்டில் ஜேர்மனி மற்றும் ஜேர்மன் மொழி மீதான ஆர்வம் அதிகரித்துவருகிறது
காரணம் என்ன?
துருக்கி நாட்டினரிடையே ஜேர்மனியும் ஜேர்மன் மொழியும் பிரபலமாகிவருகிறது. துருக்கியிலுள்ள பள்ளிகளும் கல்லூரிகளும் ஜேர்மன் மொழியைக் கற்பிப்பதில் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளன.
அதற்குக் காரணம் என்னவென்றால், ஜேர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு ஏராளம் வேலை வாய்ப்புகள் உள்ளன. ஆனால், ஜேர்மன் மொழியில்லாமல் ஜேர்மனியில் சமாளிப்பது கஷ்டம்.
எட்டு ஆண்டுகளுக்கு முன் சட்டத்துறையில் முதுகலைப் பட்டப்படிப்பு படிப்பதற்காக ஜேர்மனிக்கு வந்தார் Sumer Alaz.
அவர் வந்து இறங்கிய நகரம் Marburg. அவர் ஏற்கனவே தனது சொந்த நாடான துருக்கியிலேயே ஜேர்மன் மொழி கற்றிருந்தார்.
ஆகவே, Marburg வந்தபோது ஜேர்மன் மொழி கற்றிருந்தது அவருக்கு மிகவும் உதவியாக இருந்துள்ளது.
இப்போது சட்டத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள Alaz, ஜேர்மன் தலைநகரான பெர்லினைப் பொருத்தவரை, ஆங்கிலமும் துருக்கி மொழியும் பேசி சமாளித்துவிடலாம். ஆனால், Marburg நகரில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் கூட ஜேர்மன் மொழி பேசுகிறார்கள்.
அதுவே எனது ஜேர்மன் மொழித்திறனை வளர்த்துக்கொள்ள என்னை உற்சாகப்படுத்தியது என்கிறார் Alaz.
ஆக, ஜேர்மனியில் உயர் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளும், வேலைவாய்ப்புகளும் அதிகம் உள்ளன. அதை பயன்படுத்திக்கொள்ள ஜேர்மன் மொழி அவசியம்.
ஆகவேதான் ஜேர்மனி வழங்கும் நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதற்காக துருக்கியிலுள்ள பள்ளிகளும் கல்லூரிகளும் ஜேர்மன் மொழியைக் கற்பிப்பதில் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |