ஹர்திக் பாண்டியாவின் பேட்டை நடுவர் சோதனை செய்தது ஏன்? - இப்படி ஒரு விதி உள்ளதா?
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதியது.
முதல் ஹாட்ரிக் ரன் அவுட்
முதலில் துடுப்பாட்டம் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ஓட்டங்கள் குவித்தது. மும்பை தரப்பில் திலக் வர்மா அரைசதம்(59) அடித்தார்.
தொடர்ந்து 205 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 19 ஓவர்களில் 193 ஓட்டங்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம், தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு சென்றது.
இதில் 18வது ஓவரின் கடைசி 3 பந்துகளில் அசுதோஷ் சர்மா, மோஹித் சர்மா, குல்தீப் யாதவ் என டெல்லி வீரர்கள் வரிசையாக ரன் அவுட் ஆகினர்.
இதுவே ஐபிஎல் வரலாற்றில் முதல் ஹாட்ரிக் ரன் அவுட் ஆகும்.
பேட் சோதனை
இந்த போட்டியின் போது, நடுவர் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பேட்டை, ஒரு சாதனம் வைத்து பேட்டின் அகலத்தை சோதனை செய்வார்.
🔥 Unreal Moment in IPL 2025! 🔥
— Cricket Chronicles (@CricketChroni) April 14, 2025
Umpire checks Hardik Pandya's bat before his explosive entry! 💪🏏
#IPL2025 #HardikPandya pic.twitter.com/KoSe5HAVq0
முன்னதாக RR மற்றும் RCB க்கு இடையான போட்டியின் போது, பில் சால்ட் மற்றும் ஷிம்ரான் ஹெட்மயர் ஆகியோரின் பேட்களையும் நடுவர்கள் பரிசோதித்தனர்.
ஐபிஎல் விதிகளின்படி, வீரர்கள் பயன்படுத்தும் பேட்டின் அகலம் 10.8 சென்டிமீட்டருக்கு அதிகமாக இருக்கக்கூடாது என்பதால் நடுவர்கள் இது போன்ற சோதனைகளில் ஈடுபடுகிறார்கள்.
இந்த சோதனையில் பாண்டியாவின் பேட் அனுமதிக்கப்பட்ட 10.8 சென்டிமீட்டருக்குள் இருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |