ஈரான் எடுக்கும் அதி பயங்கர ஆயுதம் - அமெரிக்கா தாக்குதலை தாமதப்படுத்துவதன் பின்னணி
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா ஏன் தாமதிக்கிறது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா தாக்குதலை தாமதப்படுத்துவது ஏன்?
மத்திய கிழக்கு கடற்பரப்பில் அமெரிக்கா தனது போர் கப்பல்களை குவித்து வரும் நிலையில், எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் வெடிக்கும் என கருதப்படுகிறது.

அணுசக்தி திட்டங்களை கைவிடாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரித்த நிலையிலும், ஓமனில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பூஜ்ய அணு செறிவுக்கு சாத்தியமில்லை என ஈரான் உறுதியாக தெரிவித்துள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் மத்திய கிழக்கு கடலில் நிலைகொண்டுள்ள நிலையில், வர்ஜீனியா கடற்கரையில் பயிற்சியில் இருந்த மற்றொரு பிரம்மாண்ட அணுசக்தி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் (USS George H.W. Bush) தனது பணிகளை பாதியிலேயே முடித்துவிட்டு மத்திய கிழக்கு நோக்கி விரைந்து வருகிறது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்கா சென்று ஜனாதிபதி டிரம்ப் உடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதன் பின்னர் பேசிய டிரம்ப் "ஈரானுடன் பேச்சுவார்த்தை மூலமாக ஒப்பந்தம் இறுதி செய்யப்படுமா என்பதை தெரிந்து கொள்ளும் வரையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என நெதன்யாகுவிடம் தெரிவித்தேன்" என தெரிவித்துள்ளார்.
பாரிய ராணுவ வலிமை உடைய வல்லரசு நாடான அமெரிக்கா மத்திய கிழக்கில் பிராந்தியத்தில் இஸ்ரேல், சவுதி அரேபியா உள்ளிட்ட நட்பு நாடுகளை வைத்துள்ளது. மேலும், மத்திய கிழக்கில் ஏராளமான அமெரிக்கா ராணுவ தளங்கள் உள்ளது.
அமெரிக்காவின் ராணுவ வலிமையை ஒப்பிடும் போது ஈரானின் ராணுவ வலிமை சிறியது மற்றும் ஈரானில் உள்நாட்டு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் அமெரிக்கா ஏன் தாக்குதலை தொடங்காமல் உள்ளது? ஈரானின் ராணுவ வலிமை என்ன? என்பது குறித்து அதிர்வு நிகழ்வில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |