கார் ஒன்றைத் திருடியவரை அமெரிக்காவே தேடும் ஒரு பரபரப்பு செய்தி: காரணம் காருக்குள் இருந்த அந்த முக்கிய பொருள்
ப்ளோரிடாவில் கார் ஒன்றைத் திருடிய ஒருவரை அமெரிக்கா முழுவதும் அதிகாரிகள் வலைவீசி தேடி வருவதாக பரபரப்பு செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அப்படி அந்த காரில் என்ன சிறப்பு என்றால், சிறப்பு காரில் இல்லையாம், காருக்குள் இருந்த பொருளில் இருக்கிறதாம். அப்படி அந்த காருக்குள் என்ன இருந்தது.
அந்த காரில் இருந்தது 30 கொரோனா தடுப்பூசி போத்தல்கள்! கூரியர் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான கார் ஒன்றில் 10,000 டொலர்கள் மதிப்புடைய தடுப்பூசி இருந்துள்ளது.
அந்த தடுப்பூசியை கொண்டு சென்று கொண்டிருந்த காரின் , வழியில் இறங்கும்போது எஞ்சினை இயங்கும் நிலையிலேயே விட்டுவிட்டு வாகனத்தை பார்க் செய்யும் இடம் தேடி சென்றிருக்கிறார்.
அதற்குள் அவ்வழியே வந்த ஒருவர், காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். அமெரிக்கா முழுவதும் அவரை வலை வீசி தேடி வரும் பொலிசார், அவரை கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு 5,000 டொலர்கள் பரிசு அளிப்பதாக அறிவித்துள்ளார்கள்.


