ஏன் Password ஐ கடினமாக போடவேண்டும் என்று தெரியுமா?
Password ஆனது அனைத்து செயலுக்கும் முக்கியமானதொன்றாகும். இதை தனிப்பட்ட முறையில் பாதுகாக்க வேண்டும் என்பது அவசியம்.
Password என்றால் என்ன?
கடவுச்சொல் என்பது தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் ஒரு செயன்முறையாகும்.
கடவுச்சொல் ரகசியமானது என்று உறுதியாகக் கூறலாம்.
கடவுச்சொல் பொதுவாக ஒரு பயனர்பெயர் அல்லது அங்கீகாரத்தை வழங்குவதற்கான பிற பொறிமுறையுடன் இணைக்கப்படும்.
சில நேரங்களில் அது உங்கள் இரண்டாவது device இற்கு அனுப்பப்பட்ட இரண்டாவது கடவுச்சொற்றொடருடன் உறுதிப்படுத்தப்பட வேண்டியிருக்கும்.
இல்லையெனில், இரண்டாவதுdevice நிறுவப்பட்ட பயன்பாட்டின் மூலம் பெறப்பட்ட இரண்டாவது கடவுச்சொல் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
password போடும் முறையானது?
பொதுவாகவே நாங்கள் password ஐ நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று இலகுவான ஒரு முறையை பாவிப்பது வழக்கம் தான்.
ஆனால் அது முற்றிலும் தவறு. உதாரணமாக கூறவேண்டுமென்டறால் '12345' என போடுவதுண்டு. அதை முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.