திடீர் திருமணம் செய்த 24 வயது இளம் கிரிக்கெட் வீரர்! வெளியான புகைப்படம்
2016ஆம் ஆண்டு U19 உலகக்கோப்பையை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியில் விளையாடியவர் கீமோ பவுல்
23 சர்வதேச ஒருநாள், 23 சர்வதேச டி20 போட்டிகளில் கீமோ பவுல் விளையாடியுள்ளார்
மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் வீரர் கீமோ பவுலுக்கு கடந்த வாரம் திருமணம் நடந்துள்ளது.
கயானவைச் சேர்ந்த 24 வயது இளம் வீரர் கீமோ பவுல், மேற்கிந்திய தீவுகள் அணியில் ஆல்ரவுண்டர் வீரராக விளையாடி வருகிறார்.
காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் கீமோ பவுல் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் அவர் கடந்த வாரம் திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Congrats to West Indies allrounder Keemo Paul and his wife on their marriage in Guyana earlier this week.?
— Windies Cricket (@windiescricket) August 19, 2022
We wish them all the very best!❤️ pic.twitter.com/M6t2UV1KrT
தனது மனைவியுடன் பவுல் இருக்கும் புகைப்படத்தை மேற்கிந்திய தீவுகள் அணி நிர்வாகம் வெளியிட்டு, புதுமணத்தம்பதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது.
கயானாவில் இவர்களது திருமணம் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகத்து 30ஆம் திகதி தொடங்க உள்ள கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக கீமோ பவுல் விளையாட உள்ளார்.