அறிமுக போட்டியிலேயே அதிவேக அரைசதம்! அமீரகத்தை ஒயிட்வாஷ் செய்த மே.தீவுகள்
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியது.
இறுதிப்போட்டி
உலகக்கோப்பை ஒருநாள் தொடருக்கு தகுதி பெற மேற்கிந்திய தீவுகள், இலங்கை உள்ளிட்ட அணிகள் விளையாடி வருகின்றன. அந்த வகையில் மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது.
முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், கடைசி ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் நேற்று விளையாடியது.
KARIM SAHIB
சுருண்ட அமீரகம்
முதலில் ஆடிய அமீரக அணி 3 விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்கள் என நல்ல நிலைமையில் இருந்தது. அதன் பின்னர் கெவின் சின்கிளைர் மற்றும் கரியா இருவரின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அமீரக அணி 36.1 ஓவரில் 184 ஓட்டங்களில் சுருண்டது.
அதிகபட்சமாக அரவிந்த் 70 (75) ஓட்டங்களும், முகமது வசீம் 42 (34) ஓட்டங்களும் எடுத்தனர். கெவின் சின்கிளைர் 4 விக்கெட்டுகளும், கரியா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 35.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. புரூக்ஸ் 39 ஓட்டங்களும், கேப்டன் சேஸ் 27 ஓட்டங்களும் எடுத்தனர். அமீரகம் தரப்பில் ஆயன் அஃப்ஸல் கான், ஜவதுல்லா மற்றும் கார்த்திக் மெய்யப்பன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
Kevin Sinclair knows how to celebrate a wicket! ? pic.twitter.com/7WSAqzkqd0
— ICC (@ICC) June 10, 2023
பிரம்மாண்ட சாதனை படைத்த இளம் வீரர்
இந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய 24 வயது இளம்வீரர் அலிக் அதனஸி அதிரடியாக 45 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் விளாசினார்.
முன்னதாக அவர் 26 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் அறிமுக போட்டியிலேயே குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
இந்தப் பட்டியலில் அதனஸி, குர்னால் பாண்ட்யா ஆகிய இருவரும் 26 பந்துகளில் இந்த சாதனையைப் படைத்து முதலிடத்தில் உள்ளனர்.
The top 5️⃣ list of the Fastest to an ODI half-centuries on debut!?#UAEvWI #MenInMaroon pic.twitter.com/EcaZtAArNh
— Windies Cricket (@windiescricket) June 9, 2023