367 ரன் நாட்அவுட்! டிக்ளேர் கொடுத்து அதிர்ச்சியளித்த கேப்டன்..நொறுங்கிய சாதனைகள்
ஜிம்பாப்பே அணிக்கு எதிரான டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி 626 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
முச்சதம் அடித்த முதல் வீரர்
புலவாயோவில் நடந்து வரும் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணியின் தலைவர் வியான் முல்டர் (Wiaan Mulder) முச்சதம் விளாசினார்.
இதன்மூலம் கேப்டனாக களமிறங்கிய அறிமுக டெஸ்டிலேயே முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார்.
மேலும் ரன்வேட்டை நடத்திய முல்டர், முன்னாள் வீரர் ஹசிம் ஆம்லாவின் சாதனையை (அதிக ஓட்டங்கள் எடுத்த தென் ஆப்பிரிக்க வீரர்) முறியடித்தார்.
அத்துடன் 350 ஓட்டங்களை கடந்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் மற்றும் கேப்டன் எனும் வரலாற்றையும் பதிவு செய்தார்.
21 ஆண்டுகால சாதனை
முல்டருக்கு 400 ஓட்டங்களை எட்டி, மேற்கிந்திய தீவுகளின் பிரையன் லாராவின் 21 ஆண்டுகால (2004) இமாலய சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இருந்தது.
ஆனால், அவர் 367 ஓட்டங்களில் இருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி 114 ஓவரில் 626 ஓட்டங்கள் குவித்தது. முல்டர் 334 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 49 பவுண்டரிகளுடன் 367 ஓட்டங்கள் குவித்து களத்தில் நின்றார். வெர்ரெய்ன்னே 42 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |