243 பந்தில் 250 ரன்! உலக கிரிக்கெட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய கேப்டன்..மாபெரும் சாதனை
ஜிம்பாப்பே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் வியான் முல்டர் முதல் நாளிலேயே 264 ஓட்டங்கள் குவித்தார்.
ருத்ர தாண்டவம் ஆடிய முல்டர்
புலவாயாவில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
Mulder runs the show 💪
— FanCode (@FanCode) July 6, 2025
A captain’s knock for the ages — Wiaan Mulder finishes Day 1 on a staggering 264*. Is a triple ton on the cards tomorrow? 🧐#SAvZIM pic.twitter.com/Uc4UyQFZS7
நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்பே பந்துவீச்சை தெரிவு செய்ததால், தென் ஆப்பிரிக்க அணி முதலில் துடுப்பாட்டத்தில் இறங்கியது.
முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 465 ஓட்டங்கள் குவித்தது. ருத்ர தாண்டவம் ஆடிய அணித்தலைவர் வியான் முல்டர் 259 பந்துகளில் 3 சிக்ஸர், 34 பவுண்டரிகளுடன் 264 ஓட்டங்கள் விளாசி களத்தில் உள்ளார்.
டேவிட் பெடிங்கம் 82 (101) ஓட்டங்களும், லுஹான்-ட்ரே பிரிட்டோரியஸ் 78 (87) ஓட்டங்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.
சாதனைகள்
வியான் முல்டர் (Wiaan Mulder) இரட்டை சதம் விளாசியதன் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார்.
- கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டியிலேயே அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்
- முதல் நாளில் அதிக ஓட்டங்கள் எடுத்த 6வது வீரர்
- அதிவேகமாக இரட்டைசதம் அடித்த இரண்டாவது தென் ஆப்பிரிக்க வீரர்
- கேப்டனாக முதல் இன்னிங்ஸில் இரட்டைசதம் அடித்த மூன்றாவது வீரர்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |