குடிபோதையில் கார் ஓட்டியவரால் கொல்லப்பட்ட இந்த கர்ப்பிணிப்பெண்ணை நினைவிருக்கிறதா?: அவரது கணவர் என்ன செய்திருக்கிறார் பாருங்கள்...
கடந்த ஆண்டு ஆகத்து மாதம், அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த கர்ப்பிணிப்பெண் ஒருவர் மீது கார் ஒன்று மோத, நிறைமாத கர்ப்பிணியான அவர் பரிதாபமாக பலியான செய்தி சிலருக்கு நினைவிருக்கலாம்.
குழந்தையில்லாமல் கவலையடைந்திருந்த அந்த தம்பதி, இரண்டு ஆண்டுகளாக முயன்று, கடைசியாக கர்ப்பமான நிலையில், தன் குழந்தையைப் பார்க்காமலே உயிரிழந்தார் Yesenia Lisette Aguilar (23) என்ற அந்த பெண்.
நிறைமாத கர்ப்பிணியான Yeseniaவுடன் அவரது கணவர் James Alvarez வாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஜீப் ஒன்று சாலையை தாண்டி நடைபாதையில் ஏறி Yesenia மீது மோதியுள்ளது.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Yeseniaவின் வயிற்றிலிருந்த குழந்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. ஆனால், மருத்துவர்களால் Yeseniaவைக் காப்பாற்ற முடியவில்லை.
Yesenia மீது காரை மோதியதற்காக கைது செய்யப்பட்ட Courtney Pandolfi (40) என்ற பெண், ஏற்கனவே போக்குவரத்து குற்றங்களில் ஈடுபட்டதற்காக அவரது ஓட்டுநர் உரிமம் ரத்துசெய்யப்பட்டிருந்ததுடன், Courtney விபத்தை ஏற்படுத்தியபோது, போதைப்பொருள் அல்லது மதுபானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், அவர் தன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது அவருடன் என்னென்ன புகைப்படங்கள் எடுத்துக்கொண்டாரோ, அதே போன்ற புகைப்படங்களை தற்போது, அதே இடங்களில் அதே போல தன் மகளுடன் எடுத்துக்கொண்டுள்ளார்.
தன் மகள் Adalynஇன் பிறந்தநாளும், தன் மனைவி Yeseniaவுடைய இறந்தநாளும் ஒன்று என்பதால், அன்று தன் மனைவியின் நினைவாகவும், தன் மகளின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகவும் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார்.
அந்த புகைப்படங்களில் கள்ளங்கபடற்ற சிரிப்புடன் Adalyn சிரிப்பதைப் பார்த்தால் மனம் கொள்ளைபோனாலும், அவரது மனைவியின் மரணம் கண் முன் நிழலாடி கண்ணோரங்களில் ஈரம் கசிவதையும் தவிர்க்க இயலவில்லை.