பிரசவத்தை விட 10 மடங்கு வலி.,கணவனுக்காக சிறுநீரகத்தை வழங்கிய மனைவி
Wife Donate his Kidney to Save Husband in China: கணவரின் உயிரை காப்பாற்ற சிறுநீரகத்தை மனைவி தானமாக அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவனுக்காக சிறுநீரகத்தை வழங்கிய மனைவி
சீனாவை சேர்ந்த 25 வயது பெண்ணான லியாங் தன்னுடைய கணவரின் உயிரை காப்பாற்றுவதற்காக தன்னுடைய சிறுநீரகத்தில் ஒன்றை தானமாக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
லியாங்கின் 33 வயது கணவரான சுங்கிற்கு சிறு வயதில் இருந்தே சிறுநீரக கோளாறு இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக அவர் கடுமையான யூரேமியா என்ற நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

அவருக்கு ஓ-நெகட்டிவ் ரத்த வகை என்பதால் மாற்று சிறுநீரகம் கிடைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு வந்துள்ளது.
சிறுநீரக தானப் பட்டியலில் பதிவு செய்து 3 ஆண்டுகள் காத்திருந்த நிலை, அவருக்கு பொருத்தமான சிறுநீரகம் கிடைக்க மேலும் 2 முதல் 7 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு கணவர் சுங்கின் உடல் ஒத்துழைக்காது என்பதால், கணவரின் உயிரை காப்பாற்றும் முயற்சியில், இரத்த உறவு இல்லையென்றாலும் பரவாயில்லை தன்னுடைய சிறுநீரகத்தை பரிசோதனை செய்ய மனைவி லியாங் முன்வந்துள்ளார்.
10%க்கும் குறைவான அரிய வாய்ப்பாக இருவரின் திசுக்களும் பொருந்தியுள்ளன. இதையடுத்து மனைவி லியாங் இடது சிறுநீரகம் கணவர் சுங்கிற்கு குவாங்சோ மருத்துவ பல்கலைக்கழகத்தின் 3 வது இணைப்பு மருத்துவமனையில் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

கணவர் உயிரே முக்கியம்
சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சையின் போது பிரசவ வலியை விட 10 மடங்கு கூடுதலாக வலி இருந்ததாகவும், இருந்தாலும் தன்னுடைய கணவர் உயிர் பிழைத்ததில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் மனைவி லியாங் கருத்து தெரிவித்துள்ளார்.
சிறுவயதில் இருந்து மூதாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த தனக்கு, கணவர் சுங் தான் குடும்பமும், அன்பும், ஆதரவும் கிடைத்தது எனவும் தெரிவித்துள்ளார்