வீடு முழுவதும் சிதறி கிடந்த உடல் பாகங்கள்... மதுபோதையில் பெண்: நடுங்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்
பாகிஸ்தானில் பெண் ஒருவர் தனது கணவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு அதே பிணத்துடன் தூங்கி கொண்டிருந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் உள்ள கராச்சி நகரத்தை சேர்ந்தவரான முகமது சோஹைல்(60) ஒரு பெண்ணுடன் லிவ் இங் டு கெதரில் இருந்து வந்துள்ளார். இவர்களிடையே அடிக்கடி பணம் தொடர்பாக பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கராச்சி நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் உயிரிழந்த நிலையில் ஒருவரின் கை மட்டும் தெரிந்துள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்துள்ளனர். அந்த வகையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் வீட்டின் கதவை திறந்துள்ளனர்.
அப்போது தலை மற்றும் கை தனித்தனியாக வெட்டப்பட்ட நிலையில் மனித உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறி அறை முழுவதும் ரத்தக்கறைகள் படிந்து இருந்தது. மற்றொரு அறையில் பெண் ஒருவர் போதையில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார்.
அந்த பெண்ணின் உடையில் ரத்தக்கறை மற்றும் உடலை வெட்டுவதற்கான ஆயுதங்களும் அவர் அருகில் கிடந்தது. இதையடுத்து உடனடியாக பொலிஸ் அந்த பெண்ணை அதிரடியாக கைது செய்தனர்.
45 வயது மதிக்கத்தக்க அந்த பெண் மதுபோதையில் இருந்ததால் பொலிஸ் விசாரணைக்கு அவரால் முழு ஒத்துழைப்பு கொடுக்க முடியவில்லை. உயிரிழந்த நபர் கராச்சி நகருக்கு அருகில் உள்ள சதார் பகுதியை சேர்ந்தவர் என்பதும் அவருக்கு அங்கு குடும்பம் உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவரின் உடலை காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.