கணவர் மற்றும் 6 குழந்தைகளை விட்டுவிட்டு பிச்சைக்காரருடன் மனைவி ஓடிப்போனதாக புகார்
கணவர் மற்றும் 6 குழந்தைகளை விட்டுவிட்டு பிச்சைக்காரருடன் மனைவி ஓடிப்போனதாக கணவர் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவர் புகார்
இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசம், ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் ராஜு (45) மற்றும் ராஜேஸ்வரி (36). இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், ஹர்தோய் மாவட்ட காவல் நிலையத்தில் ராஜு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர், தனது மனைவி ராஜேஸ்வரி பிச்சைக்காரர் நான்ஹே பண்டிட் என்பவருடன் ஓடிப்போனதாகவும், அவரை மீட்டு தரும்படியும் கூறியுள்ளார்.
சில சமயங்களில் அவர் பிச்சை எடுக்க அக்கம்பக்கத்திற்கு வருவார் என்று கூறியுள்ளார். நான்ஹே பண்டிட் அடிக்கடி ராஜேஸ்வரியிடம் அரட்டை அடிப்பதாகவும், அவர்களும் தொலைபேசியில் பேசுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில் “ஜனவரி 3ம் திகதி மதியம் 2 மணியளவில் காய்கறிகள் வாங்க மார்க்கெட்டுக்கு செல்வதாக என் மனைவி ராஜேஸ்வரி கூறினார். ஆனால், அவர் திரும்பி வராததால் அனைத்து இடங்களிலும் தேடினேன்.
அவர், இப்பகுதியைச் சேர்ந்த பிச்சைக்காரர் நான்ஹே பண்டிட்டுடன் ஓடியிருக்கவேண்டும். அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசுவதை நான் பார்த்திருக்கிறேன். அவரை கண்டுபிடித்துத் தரவேண்டும்" என்றார்.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த பொலிஸார் 3 தினங்களுக்குள் ராஜேஸ்வரியை கண்டுபிடித்துள்ளனர். ஆனால், பிச்சைக்காரர் நான்ஹே பண்டிட்டை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |