எங்களை கொல்ல முயன்றார்... டெஸ்லா வாகன விபத்து தொடர்பில் இந்திய கணவர் மீது மனைவி புகார்
வடக்கு கலிபோர்னியாவில் செங்குத்தான பாறை ஒன்றின் மீதிருந்து டெஸ்லா வாகனத்துடன் குதித்த விவகாரத்தில், கணவர் கொல்ல முயன்றதாக மனைவி புகார் அளித்துள்ளார்.
கணவர் கொல்ல முயற்சி
இந்தியரான 41 வயது மருத்துவர் தர்மேஷ் பட்டேல் என்பவரே தமது டெஸ்லா வாகனத்தில் மனைவி நேஹா மற்றும் இரு பிள்ளைகளுடன் வடக்கு கலிபோர்னியாவில் அமைந்துள்ள செங்குத்தான பாறை ஒன்றின் மீதிருந்து தற்கொலைக்கு முயன்றவர்.

Image: Newsflash
ஆனால் அதிர்ஷ்டவசமாக மொத்த குடும்பமும் உயிருக்கு ஆபத்தின்றி தப்பியது. டிசம்பர் 2ம் திகதி நடந்த இச்சம்பவத்தில், மூன்று வாரங்கள் மருத்துவமனை சிகிச்சைக்கு பின்னர் மருத்துவரான பட்டேல் மீது முதல் நிலை கொலை முயற்சி வழக்கும் சிறார் துஸ்பிரயோக வழக்கும் பதியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் இருந்து பட்டேல் குடும்பம் மீட்கப்படும் போது, கணவர் தங்களை திட்டமிட்டே கொல்ல முயன்றார் என நேஹா மருத்துவ உதவிக்குழுவினரிடம் கூறியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Image: Newsflash
விபத்தாக தாம் கருதவில்லை
San Mateo கவுண்டி மாவட்ட சட்டத்தரணி ஸ்டீவ் வாக்ஸ்டாஃப் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இது ஒரு விபத்தாக தாம் கருதவில்லை எனவும் நேஹா குறிப்பிட்டுள்ளதாக ஸ்டீவ் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் பட்டேலுக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை, மட்டுமின்றி, மருத்துவமனையில் சிகிச்சையில் தொடரும் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

@Shutterstock
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        