மனைவி தொல்லை தாங்க முடியவில்லை! வீட்டை விட்டு தப்பியோடிய கணவரை சுற்றி வளைத்த பொலிஸ்
மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் வீட்டை விட்டு தப்பியோடிய கணவரை பொலிஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
கணவர் தப்பியோட்டம்
இந்திய மாநிலமான கர்நாடகா, பெங்களூருவில் உள்ள ஒயிட் ஃபீல்டை சேர்ந்தவர் முகேஷ் (28). இவர் மென்பொருள் பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 4 -ம் திகதி வீட்டை விட்டு வெளியில் சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், இவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின்படி, தனிப்படை பொலிஸார் விசாரணை நடத்தி தேட ஆரம்பித்தனர். அவரை யாராவது கடத்தி சென்றிருக்கலாம் என்ற அடிப்படையில் மொபைல் எண் மூலம் அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்க முயன்றனர். ஆனால், அவரது மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் முகேஷ் தன்னுடைய மொபைலில் புதிய சிம் கார்டைப் பொருத்தி ஆன் செய்துள்ளார். அப்போது அவர் நொய்டாவில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, பொலிஸார் நொய்டாவுக்கு சென்று, வணிக வளாகத்தில் திரைப்படம் பார்த்துவிட்டு வெளியே வந்த முகேஷை பிடித்தனர். பின்னர், முகேஷிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோது அதிர்ச்சி தகவல் ஒன்று தெரியவந்தது.
முகேஷ் கூறுகையில், "எனது மனைவியுடன் எனக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர் விவாகரத்து ஆனவர் என்று தெரிந்தும் திருமணம் செய்து கொண்டேன். அவருக்கு 12 வயதில் மகள் இருந்தார்.
அதன்பிறகு எங்களுக்கும் பெண் குழந்தை பிறந்தது. பின்னர், அவர் என்னை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க நினைத்தார். வீட்டில் சாப்பிடும்போது ஒரு பருக்கை கீழே சிந்தினால் கூட சண்டை போடுவார்.
அவருடன் என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. என்னுடைய சுதந்திரத்தை பறித்துக் கொண்டார். என்னை சிறையில் வேண்டுமானால் கூட அடையுங்கள். ஆனால் அவருடன் சேர்த்து வைக்காதீர்கள்" என்றார்.
பின்னர் முகேஷை சமாதானப்படுத்திய பொலிஸார் அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர். இருவருக்கும் மனநல மருத்துவர் மூலம் கவுன்சிலிங் வழங்க திட்டமிட்டனர்.
அதற்கு, முகேஸும் அவரது மனைவியும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் கவுன்சிலிங் வழங்க திட்டமிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |