கர்ப்பிணி மனைவியைக் கொல்லும் முன் எச்சரித்த கணவன்: கண்ணீருடன் தாயின் கதறல்
கர்ப்பிணியாக இருந்த தன் மனைவியை அவரது கணவர் மலையிலிருந்து தள்ளிக் கொலை செய்த வழக்கில், அந்த பெண், படித்த, தானே முடிவுகள் எடுக்கும், தன் கருத்துக்களை தைரியமாக முன்வைக்கும் பெண்ணாக இருந்ததை, அவரது கணவர் விரும்பவில்லை என தெரியவந்துள்ளது.
மலையுச்சியிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிப்பெண்
2021ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி, தன் கணவரான அன்வருடன் (Kashif Anwar, 29) தேனிலவுக்காக ஸ்காட்லாந்திலுள்ள Arthur's Seat என்ற மலைக்கு சென்றிருந்தார் ஃபவ்ஸியா (Fawziyah Javed, 31).
bbc
பின்னர் அவர் மலையுச்சியிலிருந்து கீழே விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. அவரது வயிற்றிலிருந்த ஆண் குழந்தையும் இறந்துவிட்டிருந்தது. விசாரணைக்குப் பின், ஃபவ்ஸியாவின் கணவரான அன்வர்தான் அவரை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, அவருக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறையில் செலவிடும் வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளைக்காரப் பெண்ணைப்போல நடந்துகொள்ளாதே...
இந்நிலையில், தன் மகள், படித்த, தானே முடிவுகள் எடுக்கும், தன் கருத்துக்களை தைரியமாக முன்வைக்கும் பெண்ணாக இருந்ததை, அவரது கணவர் விரும்பவில்லை என ஃபவ்ஸியாவின் தாயாகிய யாஸ்மின் கூறியுள்ளார்.
POLICE SCOTLAND
திருமணமாகி சில மாதங்களுக்குள்ளாகவே தம்பதியருக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட, அன்வர் ஃபவ்ஸியாவைத் தாக்கத் துவங்கியதைத் தொடர்ந்து, கணவருடனான உரையாடல்களை அவருக்குத் தெரியாமல் பதிவு செய்யத் துவங்கியுள்ளார் ஃபவ்ஸியா.
அப்படி பதிவு செய்யப்பட்ட உரையாடல்களில் ஒன்றில், நீ ஒன்றும் ஆண் இல்லை, பிரித்தானியப் பெண் போல நடந்துகொள்ளாதே என அன்வர் ஃபவ்ஸியாவைத் திட்டியுள்ளார். ஃபவ்ஸியா, பாகிஸ்தான் வம்சாவளியினர் ஆவார்.
தன் கணவன் தன்னைக் கொடுமைப்படுத்துவதைக் குறித்து தன் தாயிடம் ஃபவ்ஸியா கூறிய நிலையில், நீ நம் வீட்டுக்கு வந்துவிடு என்று கூறியுள்ளார் அவரது தாயான யாஸ்மின்.
POLICE SCOTLAND
விவாகரத்துக்காக அவர் திட்டமிட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில்தான் அன்வர், ஃபவ்ஸியாவைக் கொன்றுவிட்டார்.
ஒருமுறை தன் தாய் யாஸ்மினிடம் தொலைபேசியில் பேசிய ஃபவ்ஸியா, நான் சாகப்போகிறேனா, என் குழந்தையும் சாகப்போகிறதா என்று கேட்டாராம். அந்த வார்த்தைகள் தினமும் தன் காதில் ஒலித்துக்கொண்டே இருப்பதாகத் தெரிவிக்கிறார் ஃபவ்ஸியாவின் தாய் யாஸ்மின்!
CROWN OFFICE
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |