மீண்டும் கலிபோர்னியா வனப்பகுதிகளில் காட்டுத் தீ! வலுக்கட்டாயமாக மக்கள் வெளியேற்றம்
மீண்டும் கலிபோர்னியா வனப்பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காற்றின் வேகம் காரணமாக தீ அதிகமாக பரவுவதால் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் தீப்பற்றி எரியும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதாக கூறப்படுகிறது
மீண்டும் பரவியுள்ள இந்த காட்டுத்தீயில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் இருந்த மரம், செடி, கொடிகள் தீயில் கருகி சாம்பலாகியுள்ளது.
இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள இடத்தில் வசித்து வந்த 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் திடீரென பற்றிய இந்த தீயை அணைக்கும் பணியில் கலிபோர்னியா மாகாண தீயணைப்பு துறையினர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.