அமெரிக்காவில் பயங்கர காட்டுத் தீ! எரிந்து சாம்பலாகிய 1000-க்கும் மேற்பட்ட வீடுகள்
அமெரிக்காவில் காட்டுத் தீ காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பற்றிய காட்டுத் தீயால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த 30-ஆம் திகதி மணிக்கு 105 மைல் கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய பலத்த காற்றின் காரணமாக, அதிவேகமாக காட்டு தீ பரவியது.
இந்தக் காட்டுத் தீ விபத்தால் சிலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் ஏராளமான வீடுகள் மற்றும் வாகனங்கள் தீக்கிரையாகின. தீ விபத்தின் போது, வீடுகளில் வளர்த்து வந்த 67 செல்லப் பிராணிகள் காணாமல் போயுள்ளன.
தற்போது பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், பனிக்குவியலுக்கு மத்தியில், செல்லப்பிராணிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது.