குடியிருப்புகளில் இருந்து மக்கள் வெளியேற்றம்... ஜன்னல்களை மூட வலியுறுத்தல்: பிரித்தானியாவில் காட்டுத்தீ
பிரித்தானியாவில் பற்றியெரியும் காட்டுத்தீயால், குடியிருப்புகளில் இருந்து மக்கள் கூட்டமாக வெளியேற்றப்பட்டு வருவதுடன், ஜன்னல்களை மூடவும் பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல மைல் தொலைவுக்கு கரும்புகை
கிரேட்டர் மான்செஸ்டர் அருகே உள்ள மூர்லேண்டில் 13 தீயணைப்பு நிலையங்களின் பணியாளர்கள் பெரும் தீயை அணைக்க போராடி வருகின்றனர். பல மைல் தொலைவுக்கு கரும்புகை சூழ்ந்து காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
walesonline
அபெரிஸ்ட்வித், வேல்ஸில் வசிப்பவர்கள் தங்கள் குடியிருப்புகளில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். மேலும், பிற்பகல் முதல் சாடில்வொர்த்திற்கு அருகிலுள்ள மார்ஸ்டன் மூர் மற்றும் வெல்ஷ் பல்கலைக்கழக நகரத்தில் உள்ள பெங்லாய்ஸ் வனப்பகுதிகளில் தீயணைப்பு வீரர்கள் திரண்டுள்ளனர்.
இதற்கிடையில், அபெரிஸ்ட்வித், இன்ஃபர்மரி சாலையில் உள்ள கட்டிடம் ஒன்றை அவசர சேவைகள் பிரிவினர் காலி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேல்ஸ் பல்கலைக்கழக நகரம் கடும் புகைமூட்டத்துடன் காணப்படுவதாகவும் அப்பகுதி காட்டுத்தீயால் சூழப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
walesonline
காட்டுத்தீ காரணமாக அபெரிஸ்ட்வித்தில் உள்ள மருத்துவமனை சாலை தற்போது மூடப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் வாசல் மற்றும் ஜன்னல்களை மூடி வைத்திருக்குமாறு காவல்துறையில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.