பிரான்சில் பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமா இல்லையா?: பிரான்ஸ் பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்
கடந்த சில வாரங்களாகவே பிரான்சில் மூன்றாவது பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமா என்ற கேள்வி மக்கள் மனதில் ஒலித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், அந்த கேள்விக்கு பிரான்ஸ் பிரதமர் Jean Castex பதிலளித்துள்ளார்.
நேற்று இது தொடர்பாக பேசிய பிரதமர், புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோர் எண்ணிக்கை அதிகரிக்காததாலும், தடுப்பூசி திட்டம் செவ்வனே நடைபெற்று வருவதாலும் இப்போதைக்கு பொதுமுடக்கத்தை அறிவிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில், Mayotte பிரதேசத்தில் மட்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
பிரான்சின் நிர்வாக மண்டலங்களுக்குள் வைரஸ் பரவல் பெரிதளவில் இல்லை என்பதால், மண்டலங்களுக்குள் பயணம் செய்ய மக்களுக்கு கட்டுப்பாடு எதையும் விதிக்கப்போவதில்லை என முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது மக்கள் பயணிக்கும்போது மிகவும் பொறுப்புடன் நடந்துகொண்டதாகவும், விதிகளை மதித்து நடந்ததாகவும் தெரிவித்த பிரதமர் Jean Castex, ஆகவேதான் பிரான்சில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பின் கொரோனா பரவல் பெருமளவில் இல்லை என்றார்.