எல்லா நாடுகளுக்கும் சரிசமமாக வரிகள்: ட்ரம்பின் அடுத்த அதிரடி அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா, மெக்சிகோ மற்றும் சீனா மீது வரிகள் விதிப்பதாக கூறிய விடயத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், தனது கூட்டாளி நாடுகள் அனைத்தின் மீதும் சரிசமமாக வரிகள் விதிக்கப்போவதாக அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கூட்டாளி நாடுகள் அனைத்தின் மீதும் வரிகள்
🔴 Trump announced that he will impose reciprocal tariffs on several countries next week. #tarrifs pic.twitter.com/N5y0cZJcUU
— MacroMicro (@MacroMicroMe) February 7, 2025
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தனது கூட்டாளி நாடுகள் அனைத்தின் மீதும் சரிசமமாக பரஸ்பர வரிகள் விதிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
யாருக்கும் அதிகமும் இல்லை, குறைவாகவும் இல்லை, நாம் எல்லா நாடுகளையும் சரிசமமாக நடத்தும் வகையில், அனைத்து பொருளாதார கூட்டாளி நாடுகள் மீதும் பரஸ்பர வரிகள் விதிக்க இருக்கிறோம் என்று கூறியுள்ளார் ட்ரம்ப்.
அது என்ன விதமான வரிகள் என விளக்காத நிலையில், இந்த நடவடிக்கை எல்லோரையும் பாதிக்க உள்ளது என்று மட்டும் கூறியுள்ளார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |