ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா - உலக பொருளாதாரத்தை நிலைகுலைய வைக்கும் ஈரான்
அமெரிக்கா ஈரானை தாக்கினால், பதிலடியாக ஓர்முசு நீரிணையை(strait of hormuz) ஈரான் மூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓர்முசு நீரிணையை மூடும் ஈரான்?
ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் சுமார் 6000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், போராட்டக்குழுவிற்கு ஆதரவாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் என்னும் விமானம் தாங்கி போர்க்கப்பல் உள்ளிட்ட மாபெரும் கப்பற்படையை மத்திய கிழக்கை நோக்கி அனுப்பியுள்ளார்.

வெனிசுலாவுக்கு அனுப்பியதை விட மிகப்பெரிய போர்க்கப்பல் படை ஈரானை நோக்கி அதிவேகமாக விரைந்து கொண்டிருக்கிறது. நோக்கி அதிவேகமாகச் செல்கிறது. ஈரான் அணு ஆயுதங்களை கைவிட்டு, உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்.
இல்லையெனில் வெனிசுலாவில் நடத்திய தாக்குதலை விட பேரழிவை ஏற்படுத்தும் மிகக் கடுமையான தாக்குதலை ஈரான் சந்திக்க நேரிடும். நேரம் கடந்து கொண்டிருக்கிறது” டிரம்ப் எச்சரித்துள்ளார்.
டிரம்ப் ஈரானை தாக்கினால், அதற்கு பதிலடியாக ஓர்முசு நீரிணையை(strait of hormuz) ஈரான் மூடும் என்றும், இதனால் உலக பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்திக்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |