பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு
மத்திய கிழக்கு நாடான ஈரானில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள கொந்தளிப்பு மற்றும் அமைதியின்மையின் காரணமாக, அந்த நாடு தற்போது தனது மிகப்பெரிய குழப்பமான காலகட்டங்களில் ஒன்றை எதிர்கொண்டுள்ளது.
வர்த்தக நலன்களுடன்
ஆளும் மத அடிப்படைவாத அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் தெருக்களில் இறங்கி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதால், அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற ஒரு காலகட்டத்திற்குள் நாடு தள்ளப்பட்டுள்ளது.

இந்த அமைதியின்மையால் இந்தியாவும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படுகிறது. அங்கு ஏற்படும் எந்தவொரு ஸ்திரமின்மையும் இந்தியாவின் மூலோபாய மற்றும் வர்த்தக நலன்களுடன் நேரடியாகத் தொடர்புடையது.
மத்திய கிழக்கு நாட்டில் அதிகரித்து வரும் அமைதியின்மை இந்தியாவிற்கு எப்படி அச்சுறுத்தலாக அமையும்? விலைவாசி உயர்வுக்கு எதிராக டிசம்பர் 28 ஆம் திகதி தலைநகர் டெஹ்ரானில் தொடங்கப்பட்ட இந்த போராட்டங்கள், பல மாகாணங்களில் வியாபித்து, இன்று அரசுக்கு எதிரான போராட்டமாக வெடித்துள்ளது.
இதுவரை வெளியான தரவுகளின் அடிப்படையில், 538 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், கைதானவர்களின் எண்ணிக்கை 10,000 கடந்துள்ளது. இதனிடையே, அமெரிக்க அரசாங்கம் இராணுவ நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.
ஈரானில், மத்திய ஆசியா, ரஷ்யா மற்றும் ஐரோப்பாவுடனான தனது தொடர்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் திட்டங்களில் இந்தியா பெரும் தொகையை முதலீடு செய்துள்ளது.

இதில், ஈரானின் தென்கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள சாபஹார் துறைமுகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இந்தப் துறைமுகம், இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தானைத் தவிர்த்து, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்ல நேரடிப் பாதையை வழங்குகிறது.
சாபஹார் துறைமுகம்
வெளியான தரவுகளின் அடிப்படையில், இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையேயான வர்த்தக உறவு சிறப்பாக உள்ளதுடன், 2024-25 நிதியாண்டில் இது தோராயமாக 1.68 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.
தவிர, இந்தியா 1.24 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது. ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது இறக்குமதி மிகவும் குறைவாக 0.44 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.

ஈரானில் தற்போதைய நெருக்கடி மேலும் தீவிரமடைந்தால், சாபஹார் துறைமுகம் வழியாக நடைபெறும் வர்த்தக நடவடிக்கைகள் மந்தமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீப ஆண்டுகளில் இந்தியா ஈரானின் ஐந்து பெரிய வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்தியாவிலிருந்து ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் அரிசி, தேயிலை, சர்க்கரை, மருந்துகள், செயற்கை இழைகள், மின் இயந்திரங்கள், செயற்கை நகைகள் ஆகியவை அடங்கும்.
மறுபுறம், இந்தியா ஈரானிலிருந்து உலர்ந்த பழங்கள், கனிம/கரிம இரசாயனங்கள் மற்றும் கண்ணாடிப் பொருட்களை இறக்குமதி செய்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |