ஈரானின் புதிய உச்சத்தலைவரான மொஜ்தபா; அழிப்பாரா? அழிக்கப்படுவாரா?
கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவராக இருந்த அயதுல்லா அலி காமெனி மற்றும் அவரது குடும்பத்தினர் பலரும் கொல்லப்பட்டனர்.
ஈரானின் புதிய உச்சத்தலைவரான மொஜ்தபா
இதனையடுத்து, ஈரானின் தலைமையை நான் தேர்வு செய்வேன் என டிரம்ப் கூறி வந்தார். இந்த சூழலில், காமெனியின் 2வது மகனான மொஜ்தபா கமேனி, ஈரானின் புதிய உச்சத்தலைவராக அறிவிக்கப்பட்டார்.

இனி மத்திய கிழக்கு நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படாது என ஈரான் ஜனாதிபதி பெஷேஷ்கியன் கூறிய சில மணி நேரங்களில் IRGC தாக்குதல் நடத்தியுள்ளது.
இது ஈரானின் அரசியல் தலைமை மற்றும் ராணுவ தலைமைக்கு இடையேயான விரிசலாக கருதப்பட்டு வந்த நிலையில், மொஜ்தபாவின் நியமனம் வெளியானது.
ஈரானின் உச்சத்தலைவர் பதவி என்பது ஈரானில் முழு அதிகாரத்தை கொண்ட பதவி மட்டுமல்ல, அது உலகம் முழுவதும் உள்ள ஷியா இஸ்லாமியர்களின் மதத்தலைவர் பதவி ஆகும்.
டிரம்ப்பின் மிரட்டலையும் மீறி ராணுவ பின்புலம் கொண்ட மொஜ்தபா கமேனியின் நியமிக்கப்பட்டுள்ளது அவருக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே கருதப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியது, ஈரான் ராணுவநவடிக்கையை தீவிரபடுத்த உள்ளதன் அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
ஈரானின் புதிய தலைமைக்கு தனது ஆதரவு தொடரும் என ரஷ்யா ஜனாதிபதி புடின் அறிவித்துள்ளார்.
ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை அமெரிக்க தாக்குதலில் பாரிய சேதத்தை சந்தித்துள்ள நிலையில் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா, ஈரானை வெற்றி பாதையில் அழைத்து செல்வாரா அல்லது அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் அழிவாரா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
மேலும், ஈரான் தற்போது வைத்துள்ள 360 கிலோ யுரேனியத்தை வைத்து 2 வாரங்களில் 7 - 8 அணுகுண்டுகளை தயாரிக்க முடியும் என IAEA கூறியுள்ளது.
இந்த நிலையில் ராணுவ போக்கு கொண்ட மொஜ்தபா கமேனி பொறுப்பேற்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |