அமெரிக்கா செல்லும் மன்னர் சார்லஸ்: தந்தையும் மகனும் சந்தித்துக்கொள்வார்களா?
மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்ல இருக்கிறார்கள்.
அப்போதாவது மன்னர் சார்லசும் அவரது இளைய மகனான இளவரசர் ஹரியும் சந்தித்துக்கொள்வார்களா என்பதை அறிய ராஜ குடும்ப ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
தந்தையும் மகனும் சந்தித்துக்கொள்வார்களா?
அமெரிக்கா சுதந்திரம் பெற்று 250 ஆண்டுகள் ஆவதை நினைவுகூரும் வகையில் அமெரிக்காவில் இந்த மாத இறுதியில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரித்தானிய மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் அமெரிக்கா செல்கிறார்கள்.
மன்னருடைய இளைய மகனான ஹரி, அமெரிக்காவில்தான் தன் குடும்பத்துடன் வாழ்கிறார்.
மன்னரும் தன் பேரப்பிள்ளைகளை பார்த்து நீண்ட காலம் ஆகிவிட்ட நிலையில், மன்னர் சார்லசும் அவரது இளைய மகனான இளவரசர் ஹரியும் சந்தித்துக்கொள்வார்களா என்பதை அறிய ராஜ குடும்ப ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

ஆனால், மன்னரும் ஹரியும் சந்தித்துக்கொள்ளமாட்டார்கள் என Hello Magazine என்னும் ஊடகம் தெரிவித்துள்ளது.
அதாவது, மன்னர் சார்லசும் பிசியாக இருக்கிறார், ஹரியும் பிசியாக இருக்கிறார்.
ஆகவே, மன்னரும் ஹரியும் அமெரிக்காவில் சந்தித்துக்கொள்வது நடைமுறையில் சாத்தியமில்லை என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்ததாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |