இளவரசர் ஹரி அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்படுவாரா? சட்டத்தரணி தெரிவித்துள்ள தகவல்
ஹரி தனது ‘ஸ்பேர்’ புத்தகத்தில், தான் பலவகை போதைப்பொருட்களை எடுத்துக்கொண்டதாக விலாவாரியாக விளக்கியிருந்த விடயம் பிரச்சினையை உருவாக்கியுள்ளது.
அதாவது, அமெரிக்காவுக்கான விசா விண்ணப்பித்திலும், அதற்குப் பின்வரும் நேர்காணல்களிலும், சட்டவிரோத போதைப்பொருட்கள் வைத்திருக்கும், பயன்படுத்தும் அல்லது விநியோகிக்கும் விடயத்தில், எப்போதாவது, ஏதாவது சட்டத்தை மீறியிருக்கிறீர்களா என்ற கேள்வி இடம்பெற்றிருக்கும்.
அதற்கு, ’ஆம்’ என பதிலளிக்கும் பட்சத்தில், அந்த நபருடைய விண்ணப்பம் பொதுவாக நிராகரிக்கப்படும். அப்படியிருக்கும் நிலையில், ஹரி இந்த விடயத்தில், விசா விண்ணப்பத்தில் பொய் சொன்னாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Image: Getty Images
நாடுகடத்தப்படலாம் என வெளியான தகவல்
அப்படி ஹரி தனது விண்ணப்பப்படிவத்தில் பொய் சொல்லியிருந்தால் அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள்.
ஹரிக்கு மட்டும் சிறப்பு சலுகை அளிக்கப்பட்டதா? அது அவர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலா, அல்லது, நடிகையாகிய மேகனின் புகழ் காரணமாகவா என கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. ஆகவே, ஹரியின் விசா ரத்து செய்யப்படலாம், அவர் நாடுகடத்தப்படலாம் என சிலர் தெரிவித்திருந்தார்கள்.
Image: AFP via Getty Images
சட்டத்தரணி தெரிவித்துள்ள தகவல்
இந்நிலையில், இளவரசர் ஹரியின் புலம்பெயர்தல் நிலை விசாரணைக்குட்படுத்தப்படாது என தான் கருதுவதாக பிரபல சட்டத்தரணியான James. J Leonard தெரிவித்துள்ளார்.
சில போதைப்பொருட்களை சந்தோஷத்துக்காக பரிசோதனை முறையில் பயன்படுத்தியதாக ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட விடயம், புலம்பெயர்தல் தொடர்பில் ஹரிக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என நான் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார் அவர்.
எப்போது இது பிரச்சினையை ஏற்படுத்தலாம் என்றால், போதைப்பொருள் தொடர்பில் கிரிமினல் குற்றச்செயல் ஏதாவது நடந்திருந்தாலோ, அல்லது எப்போதுமே ஹரி வழக்கமாக போதைப்பொருள் எடுத்துக்கொள்பவர் என தெரியவந்தாலோ மட்டுமே பிரச்சினை ஏற்படலாம்.
இளவரசர் ஹரி விடயத்தில் அப்படி நடக்க வாய்ப்பிருப்பதாக நான் கருதவில்லை என்கிறார் James.
Image: PA
விசா குறித்த விவரங்களை வெளியிடமுடியாது
இதற்கிடையில், The Heritage Foundation என்னும் அமைப்பு, அரசிடமிருந்து ஹரியின் விசா விண்ணப்பத்தின் நகல்களைக் கோரியது.
ஆனால், விசா தொடர்பான ஆவணங்கள் சட்டப்படி இரகசியமாக வைகப்படவேண்டியவை, ஆகவே, தனிப்பட்ட ஒரு விசா குறித்து எதுவும் விவாதிக்கமுடியாது என அமெரிக்க மாகாணங்கள் துறை செய்தித்தொடர்பாளர் கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.
Image: PA