50 வயதை கடந்த ராகுல் காந்திக்கு இவருடன் விரைவில் திருமணம்? வைரலாகும் புகைப்படம்
காங்கிரஸ் தலைவர் மகளுடன் ராகுல் காந்திக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது என்ற தகவல் பரவி வருகிறது.
ராகுலுக்கு திருமணம்?
காங்கிரசின் மூத்த தலைவரான ராகுல் காந்திக்கு வயது 50 -யை கடந்த பின்னரும் இன்னும் திருமணமாகவில்லை. இதுகுறித்து அவரது தாய் சோனியா காந்தி விவசாயிகளுடன் நடந்த உரையாடலின்போது கூட பேசியிருப்பார்.
முன்னதாக, சோனிப்பட்டை சேர்ந்த விவசாய பெண்களை அழைத்து சோனியாவின் குடும்பம் விருந்து வைத்தது. இந்த நிகழ்வில் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, உரையாடிக் கொண்டிருக்கும் போதே, ராகுலை திருமணம் செய்து கொள்ள சொல்லுங்கள் என்று சோனியாவிடம் வந்திருந்த பெண்கள் கூறினர்.
அதற்கு அவர், நான் சொல்லாமல் இல்லை. நீங்கள் பெண்ணை தேடி சொல்லுங்கள் என்றார். அதற்கு ராகுல் காந்தியும் அது நடக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ராகுல் காந்திக்கு விரைவில் திருமணம் நடைபெற போகிறது என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவின் மகளான பிரணிதி ஷிண்டேவை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவுகிறது.
பிரணிதி ஷிண்டே தற்போது எம்பியாக உள்ளார். ராகுல் காந்தியின் நடை பயணத்தின் போது இருவரும் கைகோர்த்தபடி நடந்த புகைப்படமும், நாடாளுமன்றத்தில் இருவரும் பேசும்படியான புகைப்படமும் தற்போது பரவி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |