உக்ரைன் ரஷ்யப் போர் பிரான்சை எட்டுமா?: பிரெஞ்சு ஜோதிடக்கலை நிபுணர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
பிரான்சில் பிறந்தவரான ஜோதிட நிபுணரான நாஸ்ட்ரடாமஸ் எழுதிய புத்தகம் 'Les Propheties'.
1555ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்த புத்தகத்தில், எதிர்காலத்தில் என்னென்ன நடக்கும் என 942 விடயங்கள் குறித்து எழுதி வைத்திருக்கிறார் நாஸ்ட்ரடாமஸ்.
நாஸ்ட்ரடாமஸின் புத்தகம் வெளியாகி 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், இன்னமும் அவர் அடுத்த ஆண்டைக் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என எதிர்பார்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவ்வகையில், அவர் இந்த உக்ரைன் ரஷ்யப் போர் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என அறிய மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
நாஸ்ட்ரடாமஸின் 942 கணிப்புகளில் ஒன்று, பிரான்சுக்கு ஒரு பேராபத்து ஏற்படும் என்பதாகும்.
அவர்: 'Blue-head shall white-head harm in such degree, As France's good to both shall e'er amount.' என்று கூறியுள்ளார்.
அதன் பொருள் என்னவென்றால், பிரான்சுக்கு, கிழக்குத் திசையிலிருந்து ஒரு அச்சுறுத்தல் உருவாகலாம் என்பதாகும்.
இந்நிலையில், நாஸ்ட்ரடாமஸ் குறித்து ஆய்வு செய்யும் நிபுணரான Bobby Shailer என்பவர், அடுத்த பல ஆண்டுகளுக்குள் மூன்றாம் உலகப்போர் உருவாகலாம் என்று கூறியுள்ளார்.
அந்தப் போர் 25 முதல் 29 ஆண்டுகள் நீடிக்கும் ஒரு மிக நீண்ட போராக இருக்கும் என்றும், அதைத் தொடர்ந்தும் சிறு சிறு போர்கள் உருவாகும் என்றும் நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளதாக Bobby Shailer கூறியுள்ளார்.