PF பணத்தை எடுக்கும் போது Tax பிடிப்பார்களா? முழு தகவலை தெரிந்து கொள்ளுங்கள்
PF கணக்கில் உள்ள பணத்தை எடுக்கும் போது வரி செலுத்த வேண்டுமா என்பது பற்றய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
EPF Withdrawal
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நிர்வகிக்கப்படும் PF கணக்குகளில் மாதம் தோறும் குறிப்பிட்ட அளவு தொகையை ஊழியர்களாலும், நிறுவனங்களாலும் Deposit செய்யப்படுகிறது.
பணியாளர்களின் ஓய்விற்கு பிறகு EPF Account -லிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இதனை தவிர ஓய்வுக்கு முன்னரும் பணியாளர்கள் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தங்களது பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
இதில், நாம் PF கணக்கில் உள்ள பணத்தை எடுக்கும் போது வரி செலுத்த வேண்டுமா என்ற தகவலை EPF Members தெரிந்து கொள்ள வேண்டும்.
எப்போதெல்லாம் வரி செலுத்த வேண்டும்?
* 5 வருடத்திற்கு முன்பு
பணியாளர்கள் தங்களுடைய 5 ஆண்டுகள் பங்களிப்பு முடிவதற்குள் இபிஎஃப் கணக்கிலிருந்து (EPF Account) பணத்தை எடுக்கும் போது TDS செலுத்த வேண்டும்.
இந்த TDS செலுத்தாமல் இருக்க வேண்டும் என்றால் 5 ஆண்டுகள் தொடர்ந்து பணியில் இருக்க வேண்டும்.
5 வருடங்கள் அல்லது அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் இபிஎஃப் இருப்பை (EPF Balance) பழைய நிறுவனத்திடமிருந்து புதிய நிறுவனத்திற்கு மாற்றினாலும் PF பணத்தில் இருந்து TDS கழிக்கப்படாது.
* 5 வருடத்தில் தற்காலிக பணி
பணியாளர் ஒருவர் ஐந்து வருட காலத்திற்கு ஒப்பந்தத்தில் பணிபுரிந்தால் அவருக்கு PF பணம் Deposit செய்யப்படாது. இதுவே, நிறுவனம் அவரது வேலையை சில காலத்திற்கு பிறகு நிரந்தரமாக்கும் போது PF கழிக்கப்படத் தொடங்குகிறது.
இந்த சூழ்நிலையில் பணியாளர் 5 வருடங்கள் முடித்த பிறகு தனது EPF இருப்பை வேறு நிறுவனத்திற்கு மாற்ற விரும்பினால் அதற்கு வரி விதிக்கப்படும். ஏனெனில், அவர் சில காலம் தற்காலிகமாக பணிபுரிந்துள்ளார்.
* அங்கீகரிக்கப்படாத நிலை
வருமான வரி ஆணையரிடம் ஒப்புதல் பெறாத வருங்கால வைப்பு நிதி வரி விலக்கு பெற தகுதியற்றதாக கருதப்படுகிறது. இதில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பணத்தை எடுக்கும்போது வரிவிலக்கு பெறுவதற்கு வருமான வரி ஆணையரின் ஒப்புதல் அவசியமாகும்.
Zero Net Worth பற்றி தெரியுமா? அனில் அம்பானி, Byju ரவீந்திரனின் சொத்து மதிப்பு பூஜ்ஜியமானது இப்படி தான்!
நீங்கள் URPF உறுப்பினராக இருந்து 5 வருடங்கள் முடிந்தாலும், இல்லையென்றாலும் நிறைவு பணத்தை எடுக்கும் போது வரி விதிக்கப்படும்.
- 5 வருட பணி முடிவதற்குள் ரூ.50,000க்கு குறைவாக பணம் எடுத்தால் TDS கழிக்கப்படாது.
- 5 வருட பணி முடிவதற்குள் ரூ.50,000க்கு அதிகமாக பணம் எடுத்தால், PAN No கொடுத்தால் 10% TDS கழிக்கப்படும். இதுவே, படிவம் 15G/15H -ஐ சமர்ப்பிக்கும் போது TDS கழிக்கப்படாது.
- இதுவே 5 வருடங்கள் முடிந்த பிறகு நீங்கள் EPF -லிருந்து பணம் எடுத்தாலும் TDS கழிக்கப்படாது. இதனை return of income -லும் காட்ட வேண்டாம்.
- வேலை மாறிய பிறகு நீங்கள் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு PF பணத்தை மாற்ற விரும்பினாலும் TDS கழிக்கப்படாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |