ஈரானில் பாரா படைகளை களமிறக்க உள்ள ட்ரம்ப் - ஈரானின் திட்டம் என்ன?
ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலின் பின்னணி பாதிப்புகள் குறித்து பேராசிரியர் பெர்னார்டு டி'சாமி விவரித்துள்ளார்.
ஈரான் மீதான போர்
கடந்த பிப்ரவரி முதல் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில், ஈரான் உச்சத்தலைவர் அலி காமெனியை கொல்வதன் மூலம், ஏற்கனவே அங்குள்ள உள்நாட்டு கிளர்ச்சியை காரணமாக வைத்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்தலாம் என அமெரிக்கா திட்டமிட்டது.

ஆனால், ஈரான் இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. போர் ஒரு மாதத்தை எட்டியுள்ளது.
மேலும், ஹார்மோஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால் உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்கா 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனை ஏற்க 10 நாட்களுக்கு கெடு விதித்துள்ளது.
ஆனால் ஈரான் தனது கோரிக்கைகளை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போர் நிறுத்தத்திற்கு வருவோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஈரான் போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்காவிட்டால், அமெரிக்க வீரர்களை வான்வழியாக ஈரானில் தரையிறக்கி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் தாக்குதலின் பின்னணியையும், அதன் பாதிப்புகளையும் உலக அரசியல் விவகாரங்கள் நிபுணரும், வரலாற்றுப் பேராசிரியருமான முனைவர் பெர்னார்டு டி'சாமி விவரித்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |