கருகருன்னு உங்கள் முடி அடர்த்தியாக நீளமாக வளரனுமா? அரிசி கழுவிய நீரை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்
பொதுவாக நம்மில் பலர் மூன்றில் இரண்டு பங்கு முடி உதிர்தல் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர்.
இன்றைய வாழ்க்கை முறை, உணவுமுறை , சூழல் போன்ற பல காரணங்கள் முடி உதிர்வுக்கு காரணமாக அமைகின்றது.
இந்த பிரச்சனையை சரி செய்ய, உங்கள் சமையலறையிலும் தீர்வுகள் உள்ளன.
அரிசி நீர் உங்கள் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. தற்போது அரிசி கழுவிய தண்ணீரை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.
எப்படி பயன்படுத்துவது?
- ஒரு கப் அரிசியை தண்ணீரில் நன்கு கழுவி, இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும்.
- 30 நிமிடங்களுக்குப் பிறகு, அரிசியை வடிகட்டி, ஒரு கொள்கலனில் தண்ணீரை சேகரிக்கவும்.
- தலைமுடியில் அரிசி நீரை பயன்படுத்த, அதை தடவி, உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யவும்.
- உங்கள் தலைமுடியில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை விட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.
எத்தனை முறை பயன்படுத்தலாம்?
இதை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம். மேலும், பிற இயற்கை பொருட்களுடன் அரிசி நீரை சேர்த்து பயன்படுத்தும்போது, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்க இது பெரிதும் உதவும்.
அரிசி தண்ணீரை அதிகமாக பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடியை வலுப்படுத்தவும், உடைவதைத் தடுக்கவும்