ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக ஹரியின் பெயரைக் குறிப்பிட்ட வில்லியம்: உற்சாகத்தில் ரசிகர்கள்
இளவரசர் ஹரி மேகன் தம்பதியருக்கும், வில்லியம் கேட் தம்பதியருக்கும் இடையில் ஏற்பட்ட பிரிவு எப்போது முடிவுக்கு வரும் என காத்திருக்கும் ராஜ குடும்ப ரசிகர்கள் இன்னமும் இருக்கத்தான் இருக்கிறார்கள்.
இந்நிலையில், அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள விடயம் ஒன்று தற்போது நிகழ்ந்துள்ளது.
Image: Getty Images
ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக...
இளவரசர் வில்லியம் சமீபத்தில் ஆவணப்படம் ஒன்றிற்காக பேசும்போது, தனது தம்பியான ஹரியின் பெயரைக் குறிப்பிட்டார்.
தன் தாய் டயானா, வீடில்லாதவர்களைத் தங்கவைக்கும் இடம் ஒன்றிற்கு தங்களை அழைத்துச் சென்றதைக் குறித்து பேசும்போது வில்லியம் தனது தம்பி பெயரைக் குறிப்பிட்டுள்ளார்.
என் தாய் என்னையும் ஹரியையும் அங்கு அழைத்துச் சென்றார். அப்போது எனக்கு 11 வயது இருக்கும். வீடில்லாதவர்கள் குறித்து அதற்கு முன் எனக்கு எதுவும் தெரியாததால் நான் சற்று பதற்றமாகவே இருந்தேன் என்று கூறியுள்ளார் வில்லியம்.
ஆக, சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பின் வில்லியம் தன் தம்பி பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளதால், அவர்கள் இருவரும் இணையும் நல்ல விடயம் நடக்கலாம் என ராஜ குடும்ப ரசிகர்கள் எண்ணி மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |