மன்னர் சார்லஸ், இளவரசர் ஹரி சந்திப்பு: அச்சம் தெரிவித்துள்ள ராஜ குடும்ப நிபுணர்
இளவரசர் ஹரியுடனான மன்னர் சார்லசின் சந்திப்பு, இளவரசர் வில்லியமுக்கும் மன்னருக்குமிடையிலான உறவை பாதிக்கக்கூடும் என ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
இரு மகன்களுக்கிடையே தவிக்கும் தந்தை
மன்னர் சார்லஸ், இளவரசர் ஹரி குடும்பத்தை சந்தித்துள்ள விடயம், அவருக்கும் அவரது மூத்த மகனான வில்லியமுக்கும் இடையிலான உறவை பாதிக்கக்கூடும் என ராஜ குடும்ப நிபுணரான ஜென்னி பாண்ட் அச்சம் தெரிவித்துள்ளார்.

ராஜ குடும்பத்தின் மீதும், தன் மீதும் தன் மனைவியின் மீதும் ஹரி முன்வைத்த விமர்சனங்களால் கடுமையான மன பாதிப்புக்குள்ளாகியுள்ள இளவரசர் வில்லியம், ஹரியை மன்னிக்கும் மன நிலையில் இல்லை.

ஆகவே, ஹரியை மன்னர் சந்தித்தது நிச்சயம் வில்லியமுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கும் என்கிறார் ஜென்னி.
ஆனால், ஹரியைக் குறித்துப் பேசும்போது, என் செல்லப் பையன் என்றுதான் குறிப்பிடுவார் சார்லஸ். ஆக, ஒரு தந்தையாக அவரால் என்ன செய்யமுடியும்? அதுவும், எந்த தாத்தாவால் தனது சின்னஞ்சிறு பேரப்பிள்ளைகளைப் பார்க்காமல் இருக்கமுடியும் என்கிறார் ஜென்னி.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |