இந்திய அணி வீரரான இவரின்... கேப்டன்சிப்பில் விளையாட ஆசை! மனம் திறந்து சொன்ன நியூசிலாந்து வீரர் வில்லியம்சன்
நியூசிலாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான வில்லியம்சன் தன்னுடைய நீண்ட நாள் ஆசை குறித்து கூறியுள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரை வில்லியம்சன் தலைமையிலான கைப்பற்றி அசத்தியது. டி20 போட்டியை பொறுத்தவரை நியூசிலாந்து அணி அசைக்க முடியாத அணிகளில் ஒன்றாக வலம் வருகிறது.
இந்நிலையில், நியூசிலாந்து அணியின் கேப்டனான வில்லியம்சன் சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், நான் டோனியின் கீழ் விளையாட ஆசைப்படுகிறேன். மேலும் அவரிடமிருந்து கற்றுக் கொள்ளவும் அதிகம் விருப்பப்படுகிறேன்.
கிரிக்கெட்டில் டோனி ஒரு சிறந்த ஆளுமை கொண்டவர். அவரது வழியில் செயல்பட நான் விரும்புகிறேன். அவரை பார்த்து கேப்டன்ஷிப் எவ்வாறு செய்வது என்பதை கண்டு ஆச்சரியப்பட்டு உள்ளேன்.
அதனால் டோனியின் கீழே நான் விளையாடவும், அவரிடம் இருந்து கேப்டன்ஷிப்பை கற்றுக் கொள்ளவும் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.