லண்டனில் கோலாகலமாக இன்று தொடங்கும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்! அசர வைத்த மொத்த பரிசுத்தொகை
2023ஆம் ஆண்டு விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி தொடர் இன்று லண்டனில் கோலாகலமாக தொடங்க உள்ளது.
உயர்த்தப்பட்ட பரிசுத் தொகை
டென்னிஸில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொடர் விம்பிள்டன். இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இன்று லண்டனில் கோலாகலமாக தொடங்குகிறது.
இதற்கான பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது 44,700,000 பவுண்ட்ஸ் (இந்திய மதிப்பில் 464 கோடி) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட (40,350,000) அதிகம் ஆகும்.
சாதனையை நோக்கி ஜோகோவிச்
நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் காயத்தினால் விளையாடாத நிலையில், ஜோகோவிச் களம் காணுகிறார். அவர் இம்முறை பட்டத்தை வென்றால் பெடரரின் சாதனையை சமன் செய்வார்.
பெடரர் 8 முறையும், ஜோகோவிச் 7 முறையும் பட்டங்களை வென்றுள்ளனர். இந்த ஆண்டு நடைபெறும் விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் வரிசையில் அல்கராஸ், ஜோகோவிச், மெத்வ தேவ், கேஸ்பர் ரூட், ஸ்டெபானோஸ் ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.
AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |