வரலாறு காணாதப் பனிப்பொழிவில் சிக்கிய நாடு... 1500 விமானங்கள் ரத்து: அவசர நிலை பிரகடனம்
மிகப்பெரிய பனிப் புயல் கடுமையான பனிப்பொழிவை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படும் நிலையில், அமெரிக்காவில் 60 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு குளிர்கால வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
30 மாகாணங்களில்
அமெரிக்காவில் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத கடும் பனிப்பொழிவு காணப்படுவதாகவே தகவல் வெளியாகியுள்ளது. கனடாவின் பெரும்பகுதி மற்றும் கன்சாஸ் முதல் கிழக்கு கடற்கரை வரையிலான 30 அமெரிக்க மாகாணங்களில் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, ஓஹியோவிலிருந்து வாஷிங்டன் DC வரை 6-12 அங்குலம் (15-30 செமீ) பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், புளோரிடா மாகாணத்தின் சில பகுதிகள் உப்ட்ட கென்டக்கி, வர்ஜீனியா, மேற்கு வர்ஜீனியா, கன்சாஸ், ஆர்கன்சாஸ் மற்றும் மிசோரி ஆகிய மாகணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நியூயார்க்கின் புறநகர் பகுதிகளில் இதுவரை குறைந்தது 3 அடி பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. வாஷிங்டன் டிசி 5-9 அங்குல பனிப்பொழிவை எதிர்கொள்கிறது. நகரின் மேயர் குறைந்தது ஞாயிற்றுக்கிழமை மாலை வரை பனிப்பொழிவு அவசரநிலையை அறிவித்திருந்தார்.
1,500 விமானங்கள் ரத்து
இதனிடையே, கன்சாஸ், மிசோரி மற்றும் நெப்ராஸ்காவில் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மிசோரியின் சில பகுதிகளில் ஏற்கனவே 14 அங்குலம் அளவுக்கு மழை மற்றும் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் கன்சாஸ் பகுதியில் 10 அங்குலம் என பதிவு செய்யப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் கடுமையான பனிப்பொழிவுடன் கூடிய ஜனவரி இதுவென்றே நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக 1,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் 5,000 விமானங்கள் தாமதமாகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Amtrak ரயில் சேவை நிறுவனம் தங்களின் சேவைகள் பலவற்றை ரத்து செய்துள்ளது. American, Delta, Southwest மற்றும் United airlines நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் பயண நாள் மாற்றக் கட்டணங்களை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |