Wireless Internet: அறிமுகமாகிறது ஜியோ ஏர்ஃபைபர்! என்னென்ன சிறப்பம்சங்கள்
ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) புதிய வயர்லெஸ் இணைய சேவையை ரிலையன்ஸ் ஜியோ இன்று (செப்.19) அறிமுகம் செய்கிறது.
ஜியோ ஏர்ஃபைபர்
ஜியோ நிறுவனம் தனது புதிய வயர்லெஸ் இன்டர்நெட் சேவையான ஜியோ ஏர்ஃபைபரை இன்று அறிமுகம் செய்ய இருக்கிறது.
வீடு மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தும் வகையில் பிரத்யேகமாக இது அறிமுகம் செய்யப்படுகிறது. அதிகபட்சமாக நொடிக்கு 1.5 ஜிகா பிட் வேகத்தில் இன்டர்நெட் வழங்கும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், ரிலையன்ஸ் குழுமத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில்,பயனர்களுக்கு தனித்துவ அனுபவத்தை வழங்கும் நோக்கில் ஜியோ ஏர்ஃபைபர் அறிமுகம் செய்யப்படுவதாக முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார்.
சிறப்பம்சங்கள்
*ஜியோ ஏர்ஃபைபரானது ட்ரூ 5ஜி இணைப்பில் இயங்குவதுடன் அதன் கவரேஜிற்காக வயர்டு ஃபைபர் ஆப்டிக் கேபிள்களைப் பயன்படுத்துகிறது.
* பயனர்கள் 1.5 ஜி.பி.பி.எஸ் வேகத்தில் இன்டர்நெட் இணைப்பை இதில் பெற முடியும்.
* பிளக்-அண்ட்-பிளே மோடில் இதனை பயன்படுத்தலாம். பாயின்ட்-டு-பாயிண்ட் ரேடியோ இணைப்புகளைப் பயன்படுத்தி வயர்லஸ் அணுகுமுறையை ஜியோ ஏர்ஃபைபர் வழங்கும்.
*பிராட்பேண்ட் இணைப்பை பொறுத்தவரை இதனுடைய விலையானது அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ரூ.6,000 இருக்கும் எனக் கூறப்படுகிறது.
* பேரன்டல் கன்ட்ரோல் டூல், Wi-Fi 6 சப்போர்ட், ஜியோ செட்-டாப் பாக்ஸுடன் ஒருங்கிணைப்பு ஆகியவற்றைக் கொண்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |