ட்ரோன்களால் வேட்டையாடிய ரஷ்யா: 1.5 மில்லியன் மக்கள் இருளில் தவிப்பு
ஈரானிய ட்ரோன்களை பயன்படுத்தி இரவோடு இரவாக உக்ரைனின் ஒடெசா நகரை தாக்கிய ரஷ்யாவால் தற்போது 1.5 மில்லியன் மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.
இரவோடு இரவாக
குறித்த தகவலை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியே வெளியிட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான பகுதியில் மின் விநியோகம் சீரமைக்கப்பட பல வாரங்கள் முதல் 3 மாதங்கள் வரை ஆகலாம் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
@reuters
இரவோடு இரவாக முன்னெடுக்கப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதலால் ஒடெசா மற்றும் இப்பகுதியின் பிற நகரங்கள் மற்றும் கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன என்றார் ஜெலென்ஸ்கி. வெளியான தரவுகளின் அடிப்படையில், 1.5 மில்லியன் மக்கள் இதனால் பாதிப்புக்கு உள்ளானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
தற்போதைய சூழலில் மருத்துவமனைகள் மற்றும் மகப்பேறு மையங்களுக்கு மட்டுமே மின் விநியோகம் அளிக்கப்பட்டு வருகிறது என அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். சூழ்நிலை கடினமாக இருந்தாலும், கட்டுக்குள் இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த கருங்கடல் துறைமுகமானது உக்ரேனியர்களுக்கு மட்டுமின்றி ரஷ்யர்களுக்கு விருப்பத்தலமாக இருந்தது. ஆனால் பிப்ரவரி 24ம் திகதி ரஷ்ய படைகளை உக்ரைனுக்கு அனுப்பும் வரையில் சுற்றுலாத்தலமாகவும் கொண்டாடப்பட்டது.
உள்கட்டமைப்பின் மீது ஏவுகணைகளை வீசி
ஒடெசா நகரம் மீதான தாக்குதலின் இடையே, இரண்டு ட்ரோன்களை உக்ரைன் தரப்பு சுட்டு வீழ்த்தியுள்ளது. ரஷ்ய ராணுவம் உக்ரைனில் தோல்வியை எதிர்கொள்ள, உக்ரைனின் உள்கட்டமைப்பின் மீது ஏவுகணைகளை வீசி பழி தீர்த்து வருகிறார் விளாடிமிர் புடின்.
@reuters
உக்ரைனின் மின் விநியோகத்தை மொத்தமாக சேதப்படுத்துவோம் என வியாழக்கிழமை புடின் சூளுரைத்த நிலையிலேயே, இரவோடு இரவாக ட்ரோன் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.