மாரடைப்புக்கு ஆளான மான்செஸ்டர் வீரரை ஒப்பந்தம் ஜேர்மனியின் கிளப்! இயக்குநர் பெருமிதம்
டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சனை ஜேர்மனியின் கிளப் அணியான வுல்ப்ஸ்பர்க் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
கிறிஸ்டியன் எரிக்சன்
மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் விளையாடி வந்த கிறிஸ்டியன் எரிக்சன் (Christian Eriksen) இறுதி சீசனில் Free ஏஜெண்டாக வெளியேறினார்.
33 வயதான எரிக்சன், 2021யில் பின்லாந்திற்கு எதிரான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில், கிட்டத்தட்ட ஆபத்தான மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். பின்னர் ICD சாதனம் பொருத்தப்பட்ட பிறகே அவர் கால்பந்துக்கு திரும்பினார்.
மிட்பீல்டர் வீரரான இவர், டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பியூர் அணிக்காக 51 கோல்களும், அஜாக்ஸ் அணிக்காக 25 கோல்களும் அடித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுவரை
இந்த நிலையில் ஜேர்மனின் கிளப்பான விஎப்எல் வுல்ப்ஸ்பர்க் (VfL Wolfsburg) எரிக்சனை Free ஏஜெண்டாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் 2027ஆம் ஆண்டுவரை அவர் அணியில் விளையாடுவார்.
தங்கள் அணியில் எரிக்சன் இணைந்தது குறித்து வுல்ப்ஸ்பர்க் விளையாட்டு இயக்குநர் செபாஸ்டியன் ஷின்டிலோர்ஸ் கூறுகையில்,
"எல்லாவற்றையும் மிக உயர்ந்த மட்டத்தில் பார்த்து அனுபவித்த ஒரு வீரரை நாங்கள் பெறுகிறோம்.
அவரது மகத்தான அனுபவம், மைதானத்தில் அவரது தரம் மற்றும் அவரது ஆளுமை; எங்கள் இளம் வீரர்களுக்கு ஒரு மதிப்புமிக்க ஊக்கமாக இருக்கும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |