பணக்காரர்களுக்கான சிறை எது? இணையத்தில் தேடிய பெண்: கணவர் கொலை வழக்கில் கைது
அமெரிக்காவில் பெண் ஒருவர் கணவரை கொன்றுவிட்டு, துக்கத்தில் இருந்து மீள்வது எப்படி என சிறார்களுக்கான புத்தகம் எழுதியவர், தற்போது புதிய விவகாரத்தில் சிக்கியுள்ளார்.
பணக்காரர்களுக்கான சிறைச்சாலைகள்
அமெரிக்காவின் Utah மாகாணத்தை சேர்ந்தவர் 33 வயதான கூரி ரிச்சின்ஸ். இவரே பணக்காரர்களுக்கான சிறைச்சாலைகள் மாகாணத்தில் எங்கெல்லாம் அமைந்துள்ளது என இணையத்தில் தேடியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
@AP
மட்டுமின்றி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் பணம் செலுத்த எத்தனை காலமாகும் எனவும் இணையத்தில் தேடியுள்ளார். 2022 மார்ச் மாதம் கூரி ரிச்சின்ஸ் தமது கணவர் எரிக் ரிச்சின்ஸ் என்பவருக்கு மிக ஆபத்தான அளவுக்கு விஷத்தை உணவில் கலந்து அளித்துள்ளார்.
அதற்கு முன்னரே, அவர் இணையத்தில் பணக்காரர்களுக்கான சிறை தொடர்பிலும் ஆயுள் காப்பீட்டு தொகை தொடர்பிலும் தகவல் திரட்டியுள்ளார். மேலும், தாம் டெலிட் செய்த பதிவுகளை விசாரணை அதிகாரிகளால் மறுபடியும் பார்க்க முடியுமா என்பது தொடர்பிலும் தகவல் தேடியுள்ளார்.
@facebook
அளவுக்கு அதிகமாக ஐந்து மடங்கு
திங்களன்று நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள வந்த அவரை, சமூகத்திற்கு ஆபத்தானவர் என குறிப்பிட்டு நீதிபதி விசாரணை கைதியாக வைத்திருக்க உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் இது வெறும் சாதாரணமாக தேடப்பட்ட தகவல் தான் எனவும், பொதுவாக குற்றவியல் நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்டவர்கள் திரட்டும் தகவல் இதுவெனவும் அவர் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
@AP
2022 மார்ச் மாதம் ஒரு நள்ளிரவு பொலிசாருக்கு தகவல் தெரிவித்த கூரி ரிச்சின்ஸ், தமது கணவரின் உடல் உறைந்து போனது போல உள்ளது என்றார். தமது கணவருக்கு விருப்பமான ஓட்கா பானம் கலந்து அளித்ததாகவும், சில மணி நேரங்களுக்கு பின்னர் அவர் இந்த நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில், எரிக் ரிச்சின்ஸ் கடுமையான fentanyl ரசாயனத்தால் மரணமடைந்ததாக உறுதி செய்தனர்.
மேலும், அவரது உடலில் அளவுக்கு அதிகமாக ஐந்து மடங்கு fentanyl காணப்பட்டதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.