பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க அரசு முடிவு! மத்திய கிழக்கு நாடொன்றில் முடிவுக்கு வந்த குழப்பம்
ஈரானில் பெண்கள் இனி மோட்டார் சைக்கிள் ஓட்ட உரிமம் வழங்கலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
பெண்களுக்கும் ஓட்டுநர் உரிமம்
ஈரான் நாட்டு உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில், பெண் இனி மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கான உரிமத்தை உரிய முறையில் பெற்றுக் கொள்ளலாம் என தெரியவந்துள்ளது.
ஈரானில் பெண்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள் ஓட்டுவதற்கு எந்தவொரு தடையும் இல்லையென்றாலும், பல ஆண்டுகளாக பெண்களுக்கான ஓட்டுநர் உரிமம் வழங்குவதை அதிகாரிகள் மறுத்து வந்தனர்.

இந்நிலையில் ஈரான் துணை ஜனாதிபதி முகமது ரெசா அரேஃப், பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவது தொடர்பான தீர்மானம் ஒன்றில் கையெழுத்திட்டார்.
இந்த தீர்மானம் முன்னர் அதாவது ஜனவரி மாத இறுதியில் ஈரானிய அமைச்சரவையால் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம், பெண்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது தொடர்பாக நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.
தீர்மானத்தின் முக்கிய அம்சம்
ஜனாதிபதியின் ஒப்புதல் தீர்மானத்தின் படி, பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் வழங்குவது கட்டாயமாகிறது.
மேலும் போக்குவரத்து அதிகாரிகள் பெண் விண்ணப்பதாரருக்கு உரிய பயிற்சி அளிக்கவும், காவல்துறையினரின் நேரடி கண்காணிப்பின் கீழ் அவர்களுக்கான தேர்வை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |