பிரித்தானியாவில் ஜன்னலிலிருந்து விழுந்த 7 மாத குழந்தை..பெண்ணொருவர் கைது
பிரித்தானியாவில் 7 மாத பெண் குழந்தை ஜன்னல் வழியாக விழுந்ததைத் தொடர்ந்து, பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார்.
7 மாத பெண் குழந்தை
கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள ஒரு குடியிருப்புத் தெருவிற்கு அவசர சேவைகள் விரைந்தன.
பரி நியூ ரோடுக்கு அருகிலுள்ள விக்டோரியா பூங்காவில், ஒரு வான்வழி ஆம்புலன்ஸ் தரையிறங்கியது.
ஜன்னல் வழியாக விழுந்த 7 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
குழந்தையை கவனிக்காமல் விட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதே சமயம் அப்பெண் குழந்தைக்கு என்ன உறவு என்றும், அவரது வயதும் இன்னும் தெரியவில்லை.
குழந்தை விழுந்ததாக வந்த தகவலையடுத்து, காவல்துறை மற்றும் மருத்துவ உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதாக தெரிகிறது.
இதற்கிடையில் குழந்தையின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று நம்பப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |