புகைப்படம் வெளியிட்டு பிரித்தானிய மக்களின் உதவியை நாடியுள்ள பொலிசார்
பிரித்தானியாவில் பிரபல விடுதி ஒன்றில் பெண் ஒருவர் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட விவகாரத்தில், பொலிசார் அந்த நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பெண்ணின் அனுமதியின்றி
நார்தம்ப்ரியாவில் உள்ள கிரெய்ங்கர் தெருவில் அமைந்துள்ள மஷ்ரூம் பாரில் மார்ச் 23 ம் திகதி அதிகாலை 1 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
மதுக்கடையின் படிக்கட்டுகளில் ஏறிச் சென்றபோது, அந்தப் பெண்ணின் அனுமதியின்றி அவரைத் தொட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர் இச்சம்பவத்தை அடுத்து, செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதாக கூறப்படுகிறது.
நார்தம்ப்ரியா காவல்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு, பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். சம்பவத்தின் போது குறித்த பெண் எதிர்த்து போராடியதாகவும், இந்த நிலையில் விடுதியின் ஊழியர்களால் அவர் வெளியேற்றப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
புகாரை அடுத்து இந்த விவகாரத்தில் விரிவான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |