ஜேர்மனியில் பேருந்துக்குள் பெண் ஒருவரின் கொடுஞ்செயல்: சுற்றிவளைத்த பொலிசார்
ஜேர்மனியில் Siegen பகுதியில் வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் பேருந்து ஒன்றில் கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
பேருந்தில் 40 பயணிகள்
இதில் ஐவர் காயங்களுடன் தப்பிய நிலையில், மூவர் ஆபத்தாக கட்டத்தில் இருப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. பெண் பயணி ஒருவர் திடீரென்று மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்குதலை முன்னெடுத்துள்ளார்.
இச்சம்ப்வத்தில் தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். சம்பவத்தின் போது அந்த பேருந்தில் 40 பயணிகள் இருந்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து உள்ளூர் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், தொடர்புடைய பெண் ஜேர்மனி நாட்டவர் என்றும், உளவியல் பாதிப்பு கொண்டவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது
மேலும் இது பயங்கரவாத செயலாக கருத உடியாது என்றே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை Solingen பகுதியில் உள்ளூர் திருவிழாவின் போது சிரியா நாட்டவர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் மூவர் கொல்லப்பட்டதுடன், 8 பேர்கள் காயங்களுடன் தப்பினர்.
இந்த விவகாரம் ஜேர்மனி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மட்டுமின்றி கடுமையான புகலிடக் கொள்கைகளைக் கோர எதிர்க்கட்சிகளை தூண்டியது.
கைதான சிரியா நாட்டவர் ஐ.எஸ் ஆதரவாளர் என தெரிவித்துள்ளார். பல ஆயிரம் மக்கள் திரண்டிருந்த உள்ளூர் விழாவில், பலரது உயிரைப் பறிக்கவே அந்த நபர் திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.
மட்டுமின்றி, சம்பவயிடத்தில் இருந்து தப்பிய அந்த பின்னர் பொலிசாரிடம் சரணடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |