இரண்டாவது முறையாக இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண்! அரிய வகை குழந்தைகளை கண்டு வியந்து மருத்துவர்கள்
அமெரிக்காவில் பெண்ணொருவர் மோ மோ ட்வின்ஸ் எனும் அரிய வகை இரட்டை குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
இரண்டாவது முறையாக இரட்டை குழந்தை
பிரிட்னி அல்பா என்ற பெண்மணிக்கு இரட்டை குழந்தைகள் உள்ள நிலையில், அவை பிறந்த ஆறு மாதங்களிலேயே மீண்டும் கருவுற்றார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இம்முறையும் அவருக்கு இரட்டை குழந்தை தான். அதிலும் மோ மோ ட்வின்ஸ் எனும் அரிய வகை இரட்டை குழந்தை.
@uab.edu
மோ மோ ட்வின்ஸ் என்றால் என்ன?
சாதாரண இரட்டையர்களுக்கும், மோ மோ இரட்டையர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இவர்களுக்கு Chorion எனும் கருவை சூழ்ந்து இருக்கும் தசை ஒன்றாக இருக்கும். அதாவது ஒரு தசையே இரு கருக்களையும் ஒன்றாக சேர்த்து மூடியிருக்கும்.
இது தவிர Amniotic fluied எனும் நீர்க்குடமும் ஒன்றாகவே இருக்கும். மோ மோ ட்வின்ஸை பொறுத்தவரை கரு பிரிவு தாமதமாக இருக்கும். அதற்கு முன்பே கருவை மூடும் தசையும், நீர்க்குடமும் உருவாகி விடுவதால் அவர்கள் அதையே பகிர்ந்து கொள்ளும் சூழல் உருவாகும். சாதாரண இரட்டையர்களை விட இவ்வகை இரட்டையர்களை பிரசவிப்பதில் சிக்கல் அதிகம் என்று கூறப்படுகிறது.
நல்ல முறையில் பிரசவம்
இந்த நிலையில் தான் தொடக்கம் முதலே தைரியமாக பிரசவத்தை எதிர்கொண்ட பிரிட்னி, இறுதியில் வெற்றிகரமாக மோ மோ இரட்டையர்களை பிரசவித்துள்ளார்.
இது மிகவும் அரிய நிகழ்வு என்பதால் மருத்துவமனை நிர்வாகம் அவரை தீவிர கண்காணிப்புடன் பார்த்துக் கொண்டுள்ளது. வயிற்றில் இருப்பது மோ மோ ட்வின்ஸ் தான் என்று கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், கிட்டத்தட்ட 50 நாட்கள் மருத்துவமனையிலேயே கழிக்க வேண்டிய சூழலுக்கு பிரிட்னி சென்றார்.
@University of Alabama at Birmingham/Britney Alba
பின்னர் அவரின் பிரசவத்தின் சிக்கல் கருதி, 32 வாரங்கள் இருக்கும்போதே அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பாதுகாப்பாக வெளியே கொண்டுவரப்பட்டன.