நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸிடம் இருந்து 298,4057 பங்குகளை வாங்கிய ஸ்ருதி: யாரிவர்
திறந்த சந்தை பரிவர்த்தனை மூலம் ரூ 494 கோடி மதிப்புள்ள இன்ஃபோசிஸ் பங்குகளை ஸ்ருதி ஷிபுலால் என்பவர் வாங்கியுள்ளார்.
ரூ1,657 விலையில்
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இன்ஃபோசிஸ் நிறுவனத்திடம் இருந்து அவர் வாங்கியுள்ள மொத்த பங்குகளின் எண்ணிக்கை 298,4057 என்றே தெரிய வந்துள்ளது.
சராசரியாக ஒரு பங்கிற்கு ரூ1,657 விலையில் ஸ்ருதி வாங்கியுள்ளார், இதன் மூலம் பரிவர்த்தனை மதிப்பு ரூ.494.46 கோடியாக உயர்ந்தது.
நாராயண மூர்த்தியின் முயற்சியில் நண்பர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட, இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் தற்போது ரூ 6.88 லட்சம் கோடி சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது.
தற்போது 298,4057 பங்குகளை வாங்கியுள்ள ஸ்ருதி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் விளம்பரதாரர்களில் ஒருவர். இவரது தந்தை ஷிபுலால் இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டவரும் ஆவார்.
தாமரா CEO
ஸ்ருதி ஷிபுலால் தற்போது தாமரா என்ற நிறுவனத்தின் இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் செயல்பட்டு வருகிறார். தாமரா நிறுவனமானது தென்னிந்தியாவில் ரிசார்ட்கள் மற்றும் ஹொட்டல்களை நடத்தி வருகிது, அத்துடன் ஜேர்மனியிலும் களமிறங்கும் திட்டங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது.
ஷிபுலால் தற்போது தாமரா நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார். கொலம்பியா வணிகப் பள்ளி பட்டதாரியான ஸ்ருதி, அத்வைத் அறக்கட்டளை மற்றும் எஸ்டி அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளார்.
இந்த இரு அறக்கட்டளையும் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு கல்வி வாய்ப்புகள் மற்றும் சுகாதார உதவிகளை வழங்குவதில் ஈடுபட்டு வருகிறது. ஷிபுலால் குடும்ப உறுப்பினரான கௌரவ் மன்சந்தா என்பவரும் ரூ 494 கோடி மதிப்புள்ள இன்ஃபோசிஸ் பங்குகளை வாங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |