இறந்தவரை வங்கிக்கு அழைத்து சென்று கடன்பெற நினைத்த பெண் - வைரலாகும் வீடியோ
பிரேசிலில் ஒரு பெண் 68 வயதான முதியவரின் சடலத்தை வங்கிக்கு கொண்டு வந்து அவரது பெயரில் கடன்பெற முயன்றுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கடன்பெற நினைத்த பெண்
மரணமடைந்த அந்த முதியவரை குறித்த பெண் சக்கர நாற்காலியில் உட்கார வைத்து வங்கிக்கு அழைத்து சென்றுள்ளார்.
வங்கிக்குள் வரும்போதே அவரது தலை சாய்ந்த நிலையில் தான் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, அவர் ஏற்கனவே மரணமைந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி அதிகமாக பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Brazilian woman takes uncle's corpse to a bank and tries to take a loan on his name pic.twitter.com/FV70dlWzkf
— Restricted Vids (@RestrictedVids) April 17, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |