3 மாத குழந்தையை உயிருடன் புதைத்து பலி கொடுத்த பெண்! விசாரணையில் கூறிய அதிர வைக்கும் காரணம்
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தாயை பழிவாங்குவதற்காக பெண் ஒருவர் அவருடைய 3 மாத குழந்தையை உயிருடன் புதைத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாசில்காவில் உள்ள அமீர் காஸ் காவல் நிலையத்தின் அதிகார வரம்பு பகுதிக்குள் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து பொலிசார் அளித்த தகவலின் படி, சம்பவத்தன்று Amandeep Kaur தனது 3 மாத குழந்தையை பக்கத்து வீட்டில் விட்டு வங்கிக்கு சென்றுள்ளார்.
வீடு திரும்பியது போது குழந்தையை காணவில்லை என்பதால் குடும்பத்தினர் அனைவரும் தேடியுள்ளனர்.
மறுநாள் காலை Amandeep Kaur கணவருடைய சகோதரரின் மனைவி Sukhpreet Kaur,குழந்தையின் கால்களை கழிவுநீர் சேகரிக்கும் தொட்டியில் பார்த்ததாக கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, குழந்தை சடலமாக கழிவுநீர் சேகரிப்பு தொட்டியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
தாங்கள் கழிவுநீர் தொட்டியில் தேடும் போது தென்படாத குழந்தை, எப்படி தற்போது இருந்தது என குடும்பத்தினருக்கு Sukhpreet Kaur மீது சந்தேகம் எழுந்துள்ளது.
இதனையடுத்து, Sukhpreet மீது Amandeep பொலிசில் புகார் அளித்துள்ளார். Sukhpreet-ஐ பிடித்து பொலிசார் விசாரித்த போது, குடும்ப பிரச்சினை காரணமாக Amandeep பழிவாங்க நான் தான் குழந்தையை உயிருடன் புதைத்தேன் என குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் Sukhpreet மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.